அதிரும் 32 அணிகளுக்கான களம்... தொடரும் எம்பாப்பேயின் கோலாட்டம்!

நார்டிக் நாடுகளில் ஒன்றான நார்வே இந்த வெற்றியின் மூலம் அடுத்த 16 நாடுகள் பங்கேற்கும் களத்திற்குப் பாய்ந்திருக்கிறது என்றால் அதே நார்டிக் நாடுகளில் ஒன்றான ஸ்வீடன், பிரான்சிடம் மோசமாகத் தோற்றுள்ளது.
FIFA 2026
FIFA 2026ChatGPT AI Representing Image
Published on

குழுப் போட்டிகள் போல் அல்லாது வாழ்வா சாவா என்று, களம் இரண்டு திசைக் குறிகளைக் காட்டி நிற்பதால் நாக் அவுட் போட்டிகளுக்கான ஆட்டம் முழுமைக்கும் பதற்றத்திற்குப் பஞ்சமேயில்லை.

அப்படியான நிலைமைதான் நார்வேக்கும் ஐவரி கோஸ்டுக்கும் இடையிலான நேற்றைய ஆட்டம்.

முதல் பாதியில் நார்வே முதல் கோலை பதிவு செய்ய இரண்டாம் பாதியில் ஐவரிகோஸ்ட் பதிலுதை மூலம் ஆட்டத்தைச் சமன் செய்ததும் ஆடிப்போனது நார்வே.

ஹாலன்ட் காலுக்கு அந்த இரண்டாம் கோல் வசமாகாமல் போயிருந்தால் ஆட்டம் தொங்கலில் முடிந்திருக்கும்.

நார்டிக் நாடுகளில் ஒன்றான நார்வே இந்த வெற்றியின் மூலம் அடுத்த 16 நாடுகள் பங்கேற்கும் களத்திற்குப் பாய்ந்திருக்கிறது என்றால் அதே நார்டிக் நாடுகளில் ஒன்றான ஸ்வீடன், பிரான்சிடம் மோசமாகத் தோற்றுள்ளது.

இதுவரை 13 முறை உலகக்களம் கண்ட ஸ்வீடன், வலுவான பிரான்ஸ் அணியிடம் மோதி கோல் கணக்கைத் தொடங்க முடியாமல் தன் காலைச் சுட்டுக் கொண்டது.

உலகின் மிக வலுவான அணி என்று அடையாளப்படுத்தப்படும் பிரான்ஸ் அணியின் காலசைவுக்கும் எம்பாப்பே, டெம்பெல்லே, பார்கோலா மற்றும் ஒலிசே ஆகிய நால்வர் கூட்டணியின் கால் நகர்த்தலுக்கும் முன்னால் ஸ்வீடனின் முயற்சிகள் எதுவும் பழுக்கவில்லை.

எம்பாப்பேயின் இரட்டைக் கோல்களோடு பார்கோலாவின் ஒற்றைக்கோலும் இணைய ஸ்வீடனுக்குக் களம் கசப்பான அனுபவத்தை மட்டுமே அளித்தது.

மெக்சிகோவுக்கும் ஈக்வடாருக்கும் மெக்சிகோவின் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியும் நகக் கடிப்பும் புருவ நெரிப்புமாகத் தொடங்கியது. சுமார் 80000 பார்வையாளர்களைக் கொண்ட மாடத்தில் மெக்சிகோ ஆதரவாளர்களின் பிளிறல்களே அந்த அணியினரின் ஊக்கப்பலமாக அமைந்த்து.

ஆனாலும் முதல் பாதியிலேயே மெக்சிகோவின் முன்கள வீரர்கள் குயினோன்சும் , ஜெமினெசும் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு ஈக்வடாரை நிலைகுலைய வைத்தனர்.

ஆனாலும் ஈக்வடார் இரட்டிப்பு முயற்சியுடன் களமாடியது. ஈக்வடாரின் முன்கள வீரர்களான பிளாட்டாவும் வெலன்சியாவும் மெக்சிகோ கோல் முனையத்துக்குள் சென்று இலக்கை அடைவதற்காக மேற்கொண்ட ஊடறுப்புகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

இறுதியாகக் களம் இரண்டுக்குச் சுழியம் என்று நிலைபெற மெக்சிகோ அடுத்த களத்திற்குச் சென்றது.

நார்வே பிரான்ஸ், மெக்சிகோ அணிகள் அடுத்த நாக் அவுட் தளத்திற்குச் சென்றுவிட்டன. வென்ற அணிகள் அடுத்த களத்திற்கான எதிரிகளின் கால்களை எடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. பார்க்கலாம்.குழுப் போட்டிகள் போல் அல்லாது வாழ்வா சாவா என்று, களம் இரண்டு திசைக் குறிகளைக் காட்டி நிற்பதால் நாக் அவுட் போட்டிக்களுக்கான ஆட்டம் முழுமைக்கும் பதட்டத்திற்குப் பஞ்சமேயில்லை.

அப்படியான நிலைமைதான் நார்வேக்கும் ஐவரி கோஸ்டுக்கும் இடையிலான நேற்றைய ஆட்டம்.

முதல் பாதியில் நார்வே முதல் கோலை பதிவு செய்ய இரண்டாம் பாதியில் ஐவரிகோஸ்ட் பதிலுதை மூலம் ஆட்டத்தை சமன் செய்ததும் ஆடிப்போனது நார்வே.

ஹாலன்ட் காலுக்கு அந்த இரண்டாம் கோல் வசமாகாமல் போயிருந்தால் ஆட்டம் தொங்கலில் முடிந்திருக்கும்.

நார்டிக் நாடுகளில் ஒன்றான நார்வே இந்த வெற்றியின் மூலம் அடுத்த 16 நாடுகள் பங்கேற்கும் களத்திற்குப் பாய்ந்திருக்கிறது என்றால் அதே நார்டிக் நாடுகளில் ஒன்றான ஸ்வீடன், பிரான்சிடம் மோசமாகத் தோற்றுள்ளது.

இதுவரை 13 முறை உலகக்களம் கண்ட ஸ்வீடன், வலுவான பிரான்ஸ் அணியிடம் மோதி கோல் கணக்கைத் தொடங்க முடியாமல் தன் காலைச் சுட்டுக் கொண்டது.

உலகின் மிக வலுவான அணி என்று அடையாளப்படுத்தப்படும் பிரான்ஸ் அணியின் காலசைவுக்கும் எம்பாப்பே, டெம்பெல்லே, பார்கோலா மற்றும் ஒலிசே ஆகிய நால்வர் கூட்டணியின் கால் நகர்த்தலுக்கும் முன்னால் ஸ்வீடனின் முயற்சிகள் எதுவும் பழுக்கவில்லை.

எம்பாப்பேயின் இரட்டைக் கோல்களோடு பார்கோலாவின் ஒற்றைக்கோலும் இணைய ஸ்வீடனுக்கு களம் கசப்பான அனுபவத்தை மட்டுமே அளித்தது.

மெக்சிகோவுக்கும் ஈக்வடாருக்கும் மெக்சிகோவின் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியும் நகக் கடிப்பும் புருவ நெரிப்புமாகத் தொடங்கியது. சுமார் 80000 பார்வையாளர்களைக் கொண்ட மாடத்தில் மெக்சிகோ ஆதரவாளர்களின் பிளிறல்களே அந்த அணியினரின் ஊக்கப்பலமாக அமைந்த்து.

ஆனாலும் முதல் பாதியிலேயே மெக்சிகோவின் முன்கள வீரர்கள் குயினோன்சும் , ஜெமினெசும் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு ஈக்வடாரை நிலைகுலைய வைத்தனர்.

ஆனாலும் ஈக்வடார் இரட்டிப்பு முயற்சியுடன் களமாடியது. ஈக்வடாரின் முன்கள வீரர்களான பிளாட்டாவும் வெலன்சியாவும் மெக்சிகோ கோல் முனையத்துக்குள் சென்று இலக்கை அடைவதற்காக மேற்கொண்ட ஊடறுப்புகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

இறுதியாக களம் இரண்டுக்குச் சுழியம் என்று நிலைபெற மெக்சிகோ அடுத்த களத்திற்கு சென்றது.

நார்வே பிரான்ஸ், மெக்சிகோ அணிகள் அடுத்த நாக் அவுட் தளத்திற்குச் சென்றவிட்டன. வென்ற அணிகள் அடுத்தக் களத்திற்கான எதிரிகளின் கால்களை எடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. பார்க்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com