ஜெர்மானிய அணியின் கால்களில் ஈட்டியை இறக்கிய ஈக்வடார்!

ஜெர்மனி - ஈக்வடார் போட்டி குறித்த ஒரு ரசனைப் பார்வை!
FIFA 2026
FIFA 2026ChatGPT AI Image
Published on

நாக் அவுட் நிலைக்கு செல்வதற்கு முன் நான்கு முறை உலகக்கோப்பையை ருசித்த ஜெர்மனியை நாக்கு தள்ள வைத்துவிட்டது ஈக்வடார் .

ஜெர்மனிக்கு எதிராக ஈக்வடார் எடுத்துவைத்த இரண்டு கோல்கள் ஜெர்மனி அணியின் தொழில்முறை விளையாட்டுக்கு விடப்பட்ட பெரும் சவாலாகும்.

தென் அமெரிக்க நாட்டு மக்களில் பெரும்பாலோர் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக திக்குமுக்காடிக் கொண்டிருந்தாலும் சற்று மூச்சுவிடுவதற்கு கால்பந்தே அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது.

கால்பந்தை ஒரு மதமாகவே பாவித்து வரும் தென்அமெரிக்க நாடுகளில் சற்று மந்த நிலையில் இருக்கும் நாடு ஈக்வடார்.

முதல் முதலாக 2002ல் உலகக் களத்தைக் காணும் வாய்ப்பைப்பெற்ற ஈக்வடார் 2018 ஆம் ஆண்டுக்குப்பிறகு மூன்றாம் முறையாக தேர்வாகி ஈ பிரிவில் இடம்பெற்றது .

ஜெர்மனி ,கோஸ்டாரிக்கா, கியூரசாவ் அணிகளுடன் கால்கோத்த ஈக்வடாரின் கால்கள் நாக்அவுட் மேடையை நாடுமா என்ற எதிர்பார்ப்பின் புள்ளியில் ஜெர்மனிக்கு எதிரான கால்களை நகர்த்தியது.

இரண்டாம் நிமிடத்திலேயே முதல்கோலுடன் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய ஜெர்மனிக்கு 9 ஆம் நிமிடத்தில் பதிலுதை கொடுத்து - ஜெர்மனிக்கு எதிராக - பெர்லின் சுவரை எழுப்பியது ஈக்வடார்.

முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு, விழித்துக்கொண்ட ஜெர்மனி களநிலவரம் காலை வாரிவிட்டுவிடுமோ என்ற பதட்டப்பட்ட நேரத்தில் ஈக்வடாரின் பிளாட்டா போட்ட கோல் ஜெர்மனியின் முகத்தில் ஈயாட வைத்துவிட்டது.

2 க்கு ஒன்று நிலையில் வெற்றிபெற்ற ஈக்வடார், பிளாட்டாவின் காலுதவியால் நாக் அவுட் மேடைக்குச் சென்றுவிட்டது .

இதைப்போன்ற D பிரிவில் ஏகபோக கோல் அறுவடை செய்து வந்த அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது துருக்கி அணி. துருக்கி 3 யு எஸ் ஏ 2!

நாளை நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் முக்கியமானவை

ஒன்று பிரான்ஸ் vs நார்வே

மற்றொன்று உருகுவே vs ஸ்பெயின்

இரண்டு கொடுங்கால் அணிகளின் அரிய வகை கால்கூத்து ஒன்றரை மணி நேர பொழுதுபோக்காக இருக்கும் என்பது உண்மை.

Puthuyugam
www.puthuyugam.com