அந்த 7 ஆம் நிமிடத்தில் 7 ஆம் எண் வீரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இட்ட முதல் கோல்!

டி ஆர் காங்கோவிடம் விட்ட கோட்டையை உஸ்பெஸ்கிஸ்தானிடம் பிடித்திருக்கிறது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி.
Ronaldo
RonaldoChat GPT AI Image
Published on

அந்த 7 ஆம் நிமடத்தில் 7 ஆம் எண் வீரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இட்ட முதல் கோல்

டி ஆர் காங்கோவிடம் விட்ட கோட்டையை உஸ்பெஸ்கிஸ்தானிடம் பிடித்திருக்கிறது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி.

முதல் போட்டியில் டி ஆர் காங்கோ அணியினர் தங்களது கனரகக் கால்களால் அமைத்த திடமான கோட்டையை போர்ச்சுகலால் உடைக்கமுடியவில்லை.

ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையில் முடிந்த அந்தச் சமரினால் பெற்ற வலியை துடைக்கும் நோக்கில் உஸ்பெஸ்கிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கியது போர்ச்சுகல்.

நடுஆசிய நாடான உஸ்பெஸ்கிஸ்தான் முதல் முறையாக உலக கோப்பைக்குத் தேர்வாகி உலகளாவிய களத்தில் கால்குலுக்க வந்திருக்கிறது.

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அணிகளைப்போன்ற கள அனுபவம் இல்லாத உஸ்பெஸ்கிஸ்தான் போர்ச்சுகல்லை எதிர்கொள்ளும்போது டேவிட் கோலியாத் தோற்றத்தைத்தான் தந்தது.

ஆனாலும் களத்தில் எந்த கால் எப்படிக் கம்புச் சுற்றும் என்று தெரியாது அல்லவா? காங்கோவிடம் கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து தன்னை சுதாரித்துக்கொண்ட போர்ச்சுகல் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கியாடியது.

ஆட்டம் தொடங்கிய ஏழாம் நிமிடத்திலேயே ஏழாம் எண்ணைக் கொண்ட போர்ச்சுகல்லின் நட்சத்திர ஆட்டக்காரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலாம் கோல் போட்டு கணக்கைத் தொடங்கினார்.

இரண்டாவதாக கிடைத்த இலவச இடியை ரொனால்டா போடுவார் என்று எதிர்பார்த்த மாத்திரத்தில் மென்டசின் கால் துல்லியத் தாக்குதல் நடத்த, வலைக்குள் புகுந்தது பந்து.

அதற்கு அடுத்தடுத்த இடைவெளிகளில் கால்கோல் விழா நடந்து கொண்டேயிருந்தது.

ரொனால்டோ போட்ட மற்றொரு கோல், உஸ்பெஸ்கிஸ்தானே தன் உள்பெட்டியில் போட்ட சொந்தக்கோல் என்று ஆட்டநேர முடிவில் ஐந்து கோல்களுடன் வாகைசூடியது போர்ச்சுகல்.

இதே குழுவில் நடந்த மற்றொரு போட்டியில் டி ஆர் காங்கோ மற்றும் கொலம்பியா களமிறங்கின.

75 ஆம் நிமிடம் வரைக்கும் இந்த ஆட்டத்தின் நாயகன் காங்கோ வலையான் எம்பாசிதான் திகழ்ந்தான். விடாகண்டன் கொடாகண்டனாய் கொலம்பியாவின் கோல் முயற்சிகளையெல்லாம் முறியடித்தான்.

ஆனாலும் எம்பாசியின் காப்பரணை கொலம்பிய வீரன் மூனோசின் கோல் உடைத்தெறிய ஒன்றுக்குச் சுழியம் என்ற கோல்கணக்கில் கொலம்பியா வெற்றிகொண்டது.

இங்கிலாந்துக்கும் கானாவுக்குமிடையே நடந்த மற்றொரு விளையாட்டு, கோல் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் டிராவில் முடிந்தது. ஆட்ட நேரம் முழுக்க பந்து இங்கிலாந்தின் காலணிக்குள்தான் இருந்தன. ஆனாலும் கானாவின் காப்புக்கால்கள் இங்கிலாந்துக்கு ஆம் சொல்லவில்லை.

Puthuyugam
www.puthuyugam.com