'சிறையில் உயிரை மாய்த்துவிட நினைத்தேன்!'- ஸ்ரீசாந்த் உருக்கம்

இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராக ஜொலித்த ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை ஸ்பாட் ஃபிக்ஸிங் என்ற குற்றச்சாட்டோடு முடிந்து போனது. இந்த இக்கட்டான காலத்தில் அவருக்கு துணை நின்றது யார்?
'சிறையில் உயிரை மாய்த்துவிட நினைத்தேன்!'- ஸ்ரீசாந்த் உருக்கம்
Published on

இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். கிரிக்கெட் வாழ்க்கையில் இருமுறை மோசமான சர்ச்சைகளில் சிக்கியவர். கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இவருடன் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜித் சண்டிலா  (Ajit Chandila) அங்கீத் சவான் (Ankeet Chavan) ஆகிய வீரர்களும் கைது செய்யப்பட்டு, திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் திகார் சிறையில் ஸ்ரீசாந்த் கழித்தார். பின்னர், ஜாமீனில் வெளி வந்த அவர், 2015ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்துப் போனது.

தற்போது, தான் சிறையில் கழித்த நாட்கள் குறித்து ஸ்ரீசாந்த் லல்லன்டாப் (Lallantop) யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ''சிறையில் இருந்த போது, தற்கொலை எண்ணம் மேலோங்கியது. அப்போது, எனது மனைவி புவனேஷ்வரிகுமாரி வெளியில் இருந்து சட்டரீதியாக எனக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவரது, முகத்திற்காகவே நான் எனது தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன். எனது மனைவி ஜெய்ப்பூரின் திவான்பூரா (Diwanpura) அரச பரம்பரையைச் சேர்ந்த இளவரசி. கடந்த 2007ம் ஆண்டு அவரை, முதன் முதலாக சந்தித்தேன். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடத்தில் கூறினேன். அதேபோலவே, உலகக் கோப்பையை வென்றபிறகு, திருமணம் செய்து கொண்டோம்.

Welco

ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்ட போது, எனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் எனக்கு ஒரு நிலையான சப்போர்ட்டை தந்தனர். என் மீது என் மனைவிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எல்லோரும் என்னை வில்லனாக பார்த்த போது, வக்கீல்களிடத்தில் எனது ஜாமீனுக்காக எனது மனைவி போராடிக் கொண்டிருந்தார். எனக்கு ஜாமீன் கிடைக்க அவர் மட்டுமே காரணம். சிறையில் இருந்தபோது, உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால், எனது மனைவியின் முகம் மட்டுமே எனது முடிவை மாற்றச் செய்தது.

டெல்லி காவல் நிலையக் காவலில் 12 நாட்களும், திகார் சிறையில் கழித்த 27 நாட்களும், சாதாரண வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகச் சாதாரணமானவை என்பதை எனக்கு உணர்த்தின. வழக்கு விசாரணைக்கே பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால், நான் இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனேன். இந்த சம்பவம் என்னை மனதளவில் வலிமையாக்கியது. சிறையில் இருந்த போது, எனனது பெற்றோர், அண்ணன், தங்கை பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாத காலத்திற்கு, நாடு முழுவதும் அனைவரின் கவனமும் என் மீதே இருந்தது. இருப்பினும், கடவுள் கிருபையில் அந்த கடினமான நாட்களில் இருந்து மீண்டு விட்டேன்" என்றார்

இந்தியாவுக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்தை ஐ.பி.எல் தொடரின் போது, ஹர்பஜன் சிங் தாக்கினார். அப்போதும், ஸ்ரீசாந்த் பற்றி கிரிக்கெட் உலகம் பரபரப்பாக பேசியது. இந்த சமயத்திலும், ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக அவரின் மனைவி புவனேஷ்வரி குமாரி நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்த் புவனேஷ்வரிகுமாரியை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

Puthuyugam
www.puthuyugam.com