எப்ஸ்டீன் ஃபைலில் இடம் பெற்றுள்ள 'போர்ப்ஸ்' பில்லியனர்கள் யார்? #EpsteinFiles

எப்ஸ்டீன் ஃபைலில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் உள்ளிட்ட பெரும் பணக்காரகள் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர்களில், பலர் பாலியல் வன்கொடுமை நடந்த தீவுக்கு பயணமும் மேற்கொண்டுள்ளனர்.
Trump with Epstein
Trump with Epstein
Published on

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைலில் ஏராளமான போர்ப்ஸ் பில்லியனர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆவணத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் எல்லாம் தவறிழைத்திருப்பார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஆவணத்தில் பெயர் இடம் பெற்றுள்ளவர்களில் பலர் "நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்று மறுத்துள்ளனர். எப்ஸ்டீன் ஃபைலில் இடம் பெற்றுள்ள, போர்ப்ஸ் பட்டியலில் உள்ள பில்லியனர்கள் பட்டியலை பார்க்கலாம்.

போர்ப்ஸ் பட்டியலில் 108 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 19வது இடத்திலுள்ள பில் கேட்ஸிஸின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் பின்னரே, எப்ஸ்டீனின்ன் 'லோலிடா எக்ஸ்பிரஸ்' என்ற பிரைவேட் விமானத்தில் பயணம் செய்ததையும், இரண்டு ரஷ்யப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டதையும் அவர் ஒப்புக் கொண்டார். பெண்களுடன் நேரம் செலவிட்டபோது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவோ அல்லது பார்க்கவோ இல்லை' என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்ஜி பிரின் 52 வயதானவர். 237 பில்லியன் டாலர்களுடன் உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர். இவர், கடந்த 2007 ம் ஆண்டு எப்ஸ்டீனின் தனித் தீவுக்குச் சென்று உணவு அருந்தியதாக இமெயில் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, 88 வயதான லெக்ஸ் வெக்ஸ்னர், 8.8 பில்லியன் டாலர்சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் 402வது இடத்தில் உள்ளார். Bath & Body Works நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். சில்லறை விற்பனை சாம்ராஜ்யமான எல் பிராண்ட் நிறுவனத்தை நிறுவியவர். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எப்ஸ்டீனுக்கு உலகப்பணக்காரர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ள உதவியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

epstein
epstein

போர்ப்ஸ் பட்டியலில் 2.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 1504வது இடத்தில் இருக்கும் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சனும் எப்ஸ்டீனின் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளார். தற்போது, 75 வயதான பிரான்சன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள நெக்கர் தீவில் வசிக்கிறார். அங்கிருந்து 20 நிமிட ஹெலிகாப்டர் பயணத் தூரத்தில்தான், எப்ஸ்டீனின் "குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தீவு" என்று அழைக்கப்படும் செயின்ட். ஜேம்ஸ் தீவு அமைந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு இருவரும் இருமுறை சந்தித்துக்கொண்டனர். இரு முறையும் எப்ஸ்டீன் பெண்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

2.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 1193-வது பணக்காரரான ஸ்டீவ் டிஷ், எப்ஸ்டீனுடன் பல சந்தேகத்திற்குரிய உரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க கால்பந்து அணியான (என். எஃப்.எல்) நியூயார்க் ஜெயன்ட்ஸின் உரிமையாளரான இவர், எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

12.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 251-வது பணக்காரரான 74 வயது லியோன் பிளாக் , அப்பல்லோ மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர், மீது எப்ஸ்டீனின் மாளிகையில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 2021-ம் ஆண்டு தனது அப்பல்லோ நிறுவனத்திலிருந்து விலகினார்.

st.james island
st.james island

68 வயதான கிளென் டூபின், 2.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 1440-வது இடத்தில் உள்ளார். இவர் 'லோலிடா எக்ஸ்பிரஸ்' விமானத்தில் 21 முறை பயணம் செய்துள்ளார் . இவரின், மனைவி ஈவா டூபினும் எப்ஸ்டீனைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார். இந்தத் தம்பதியின் 19 வயது மகளான செலினா டூபினை எப்ஸ்டீன் காதலித்தாகவும் அவரைத் திருமணம் செய்ய விரும்பியதாகவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிங்க்ட்இன் நிறுவனத்தின் இணை நிறுவனர் 58 வயதான ரீட் ஹாஃப்மேன், 2.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் 1560-வது இடத்தில் உள்ளார். இவர் 2014-ம் ஆண்டு எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றுள்ளார்.

ஹயாத் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான 75 வயதான டாம் பிரிட்ஸ்கர், 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 677வது பணக்காரராக உள்ளார். 2018 ம் ஆண்டில் இவர் , லோலிடா எக்ஸ்பிரஸில் பறந்துள்ளார். எப்ஸ்டீனின் காதலி கரினா ஷுலியாக்குடன் தொடர்பில் இருந்துள்ளார். ஹயாத் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்போது விலகி விட்டார். எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளுக்கு மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், 64 வயதானவர். கேன்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர். 7.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 542வது பணக்காரர் ஆவார். எப்ஸ்டீனுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த போதிலும், 2005 ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே அவரைச் சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால், 2012ம் ஆண்டு இவர் குடும்பத்துடன் எப்ஸ்டீனுக்கு சொந்தமான தீவுக்குச் சென்றதாக தகவல் உள்ளது.

ஒரு கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், பின்னர் நிதி ஆலோசகராகி, பெரிய பணக்காரர்களுடன் பழகத் தொடங்கினார். அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் உட்பட பலர் அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள்.''நட்பு வட்டத்தில் இருந்தோமே தவிர , நாங்கள் பாலியல் விவகாரங்களில் ஈடுபடவில்லை'' என்று அனைவருமே , இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். எல்ப்ஸ்டீனுடன் வைத்திருந்த நட்பால், தனது ராஜகுடும்ப பட்டத்தைப் பறிகொடுத்தார் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் இளைய சகோதரர் ஆன்ட்ரூ என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த எப்ஸ்டீன் கடந்த 2019ம் ஆண்டு நியூயார்க் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

Puthuyugam
www.puthuyugam.com