சுப்மன் கில் இல்லையாம்... சாராவின் காதலர் யார்?

சுப்மன் கில்லுடன் சாராவுக்கு காதல் என்று வதந்தி பரவியிருந்தது. ஆனால், உண்மை என்ன?
சித்தார்த்துடன் சாரா
சித்தார்த்துடன் சாரா
Published on

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இருவருமே பொதுவெளியில் இந்த தகவலை ஒப்புக் கொள்ளவில்லை. சாராவுடன், சுப்மன் கில்லின் சகோதரி நெருங்கிய நட்பில் இருந்தாக சொல்லப்பட்டது. இதன், காரணமாக சுப்மன் கில்லுடன் சாராவுக்கு காதல் என்றும் வெளியானதாகவும் கூறப்படுகிறது

தற்போது, சாராவுக்கு 27 வயதாகிறது. ஆனால், சாராவை விட சுப்மன் கில் 2 வயது குறைந்தவர் என்கிற தகவலும் உண்டு. அதே வேளையில், சச்சினின் மனைவி அஞ்சலி தனது கணவரை விட 5 வயது மூத்தவர். அந்தவகையில், தாயைப் பின்பற்றி சுப்மன் கில்லை சாரா மணப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் , சுப்மன் கில், தான் யாருடனும் டேட்டிங் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

டெண்டுல்கர் குடும்பம்
டெண்டுல்கர் குடும்பம்

பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் சாரா என்றும் தகவல் வெளியே கசிந்தது. ஆனால், பாலிவுட் பக்கமே அவர் தலை வைத்து படுக்கவில்லை. பயோமெடிக்கல் மற்றும் நியூட்ரிசன் நிபுணராக மாறிய சாரா சமீபத்தில் மும்பையில் பிளேட்ஸ் அகாடமி என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதோடு, டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ளார். சாரா டெண்டுல்கரும் தந்தையைப் போலவே கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஜெட் சின்தசிஸ் மூலம் நட்த்தப்படும் குளோபல் இ-கிரிக்கெட் பிரீமியர் லீக்கில் (GEPL) மும்பை அணியின் உரிமையையும் சாரா வாங்கியுள்ளார்

Fitness தொடர்பான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் சுற்றுலா விளம்பரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதனால், வருமானம் கொட்டுகிறது. சிறந்த இளம் பெண் தொழில் முனைவோராகவே அவர் மாறி விட்டார்.

அதோடு, மாடலிங் , போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் சாரா, விளம்பரங்களுக்கு கொடுத்தபுகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில், சாரா கோவாவை சேர்ந்த ரெஸ்டாரன்ட் அதிபர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கோவாவுக்கு விடுமுறையில் சென்ற சாரா, சித்தார்த் கேர்கர் என்ற அந்த இளைஞருடன் சுற்றி திரிந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

சித்தார்த் கேர்கர் சச்சின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியை சித்தார்த்துடன் சேர்ந்து சாராவும் காண வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

சாரா
சாரா

சமீபத்தில் , சச்சினின் மகன் அர்ஜூனுக்கும் மும்பை தொழிலதிபரும் கிராவிஸ் குரூப்பின் தலைவருமான ரவி கையின் பேத்தி சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சச்யதார்த்தத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். எனினும், இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இந்த நிலையில், சானியா சந்தோக் சமீபத்தில் மும்பையில் மிஸ்டர். பா பெட் ஸ்பா என்ற விலங்குகளுக்கான நல மையம் ஒன்றை திறந்தார். இந்த நிறுவனத்தை சாரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1997 ம் ஆண்டு மும்பையில் பிறந்த சாரா திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் படித்தார். மேல்படிப்பை லண்டனில் முடித்தார். தற்போது, மும்பை திருமண மார்க்கெட்டில் Most Elibible Bachelorஆக சாரா உள்ளதாக கூறுகிறார்கள்.

Puthuyugam
www.puthuyugam.com