'பணத்துக்காக சுஷ்மிதா பழகினாரா?'- மனம் திறந்த லலித் மோடி

"சுஷ்மிதா சென் மற்றவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதை ஒருபோதும் விரும்பியதில்லை . அவர் மீது பிரயோகப்படுத்தப்பட்ட 'கோல்டு டிக்கர்' (Gold Digger )என்ற வார்த்தை முற்றிலும் தவறானது."
Lalit Modi and Sushmita Sen
Lalit Modi and Sushmita Sen X/LalitKModi
Published on

சுஷ்மிதா சென் தன்மானமுள்ள பெண், யாரிடமும் எதையும் பரிசாகப் பெற நினைக்காதவர் என்று ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித்மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட முக்கியக் காரணமாக இருந்தவர் லலித் மோடி. ஐ.பி.எல். அமைப்பில் பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியாவிலிருந்து தப்பி விட்டார். தற்போது, லண்டனில் வசிக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு தனது சோசியல் மீடியாவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக லலித் மோடி திடீரென்று தெரிவித்தார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த சமயத்தில், நெட்டிசன்கள் பலரும் நடிகை சுஷ்மிதா சென்னை குறை கூறினர். பணத்துக்காக லலித் மோடியை சுஷ்மிதா வளைத்துப் போட்டுள்ளதாக தாறுமாறாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், சுஷ்மிதா சென்னுடனான தனது உறவு குறித்து லலித் மோடி ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே (Humans of Bombay) சமூகவலைத்தளப் பக்கத்துக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அதில் லலித் மோடி கூறியதாவது, ''சுஷ்மிதா சென் குறித்த இந்த விமர்சனம் நியாயமற்றது. ஒருபோதும் என்னை நிதி ரீதியாகச் அவர் சார்ந்திருந்ததில்லை.

உண்மையில், நாங்கள் வெளியே சென்ற போது, அவர் வைர நகைகள் வாங்கினார். அதற்கு, அவரே பணம் கொடுத்தார். நான் ஒரு பாய் பிரெண்ட்டாக மட்டுமே உணர்ந்தேன். சுஷ்மிதா சென் ஒரு அன்பான தோழி. எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தவர்.

சுஷ்மிதா தனது வெற்றியை அவரே கட்டமைத்ததார். அவர் ஒரு அழகான, வெற்றிகரமான மற்றும் சுயமாக முன்னேறிய பெண். எனது நண்பர்களை விட, சுஷ்மிதாவிடம் அதிக வைரங்கள் உள்ளன. அனைத்தையும் சுயமாகச் சம்பாதித்தார். அவருக்கு வைரக் கடைகள் கூட உள்ளன. என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காலத்தில் ஒருபோதும் என்னை நிதி ரீதியாகச் சார்ந்திருக்கவில்லை . நாங்கள் வெளியே சென்ற சமயங்களில் நான் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அவரே எல்லாவற்றிற்கும் பணம் செலுத்தினார். நான் ஒரு செல்லப்பிள்ளை போல உடன் இருந்தேன் அவ்வளவுதான்.

சுஷ்மிதா மற்றவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதை ஒருபோதும் விரும்பியதில்லை . அவர் மீது பிரயோகப்ப டுத்தப்பட்ட 'கோல்டு டிக்கர் ' (Gold Digger ) என்ற வார்த்தை முற்றிலும் தவறானது. சுஷ்மிதா யாரிடமிருந்தும் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே, மக்கள் சுஷ்மிதாவைப் பணத்திற்காக ஆசைப்படும் பெண் என்று குறை கூறியது முற்றிலும் தவறானது. சுஷ்மிதா ஒரு உண்மையான வைரம். அந்த வகையில் நான்தான் 'டயமண்ட் டிக்கர்' (Diamond Digger).

(Credit: X/LalitKModi)

எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் சுஷ்மிதா என் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். சுஷ்மிதா எனக்கு ஸ்பெஷலானவர். எனது வளர்ச்சிக்கு அவர் உதவினார். அந்தக் காலகட்டத்தில் என் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இருந்தார். இது ஒரு மிகவும் சிறப்பான உறவு. நாங்கள் இப்போது ஒன்றாக இல்லாவிட்டாலும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரம் இப்போதும் மனதுக்குள் இனிமையை தருகிறது.

அவர் இப்போதும் எனக்கு மிகவும் பிரியமான தோழி. அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. அவர் ஒரு அற்புதமான பெண். தனது மகள்களான ரெனி மற்றும் அலிஷாவுக்கு ஒற்றைத் தாயாக அவர் செய்த காரியங்கள் அளப்பரியது.

கடந்த 2022ம் ஆண்டு எங்களது உறவை பற்றி, சுஷ்மிதா அருகில் இருந்தபோதுதான், இன்ஸ்டாவில் பதிவிட்டேன். விமானத்தில் லண்டன் சென்று கொண்டிருந்த போது, அந்த பதிவை சிரித்துக் கொண்டே பதிவு செய்தேன். அப்படி, நான் பதிவிடுவேன் என்று சுஷ்மிதா நினைக்கவில்லை. ஆனால், லண்டனில் இறங்கியதுமே எதிர்வினை பயங்கரமாக இருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. நிலைமை கைமீறிப் போயிருந்தது. அந்த சூழலிலும், அந்த பதிவை நீக்கும்படி சுஷ்மிதா என்னிடம் கேட்கவில்லை.''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு மிட்-டே ( Mid-Day) நாளிதழுக்கு சுஷ்மிதா சென் அளித்திருந்த பேட்டியில், 'லலித் மோடியுடனான உறவு தனது வாழ்க்கையில் சிறிய ஒரு பகுதி மட்டுமே' என்று தெரிவித்திருந்தார்.

Puthuyugam
www.puthuyugam.com