தமிழகத்தின் பணக்கார நிறுவனம்; HCL - ஐ முந்தியது முருகப்பா குழுமம்!

சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு மியான்மரில் (இப்போது பர்மா) தொடங்கப்பட்டது. முருகப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட , இந்த நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்தது.
தமிழகத்தின் பணக்கார நிறுவனம்; HCL - ஐ முந்தியது முருகப்பா குழுமம்!
murugappa group
Published on

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய நிறுவனங்களில் எந்த நிறுவனம் பணக்கார நிறுவனம் என்று கேட்டால், சிவ நாடாரின் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனத்தை கைகாட்டுவார்கள். இந்தியாவின் பணக்கார நிறுவனங்களில் ஹெச்.சி.எல்- லும் ஒன்று. இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் சிவ நாடார், மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருப்பார். தற்போது, ஹெச்.சி.எல் நிறுவனத்தை சிவ நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், முதன்முறையாக ஹெச்.சி.எல் நிறுவனத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான முருகப்பா குழுமம் சொத்து மதிப்பில் முந்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு மியான்மரில் (இப்போது பர்மா) தொடங்கப்பட்டது. முருகப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்தது. சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம் (Cholamandalam Investment and Finance) கோரமண்டல் இன்டர்நேஷனல் (Coromandel International) ஈ.ஐ.டி பாரி (E.I.D. Parry டி.ஐ சைக்கிள்ஸ் (BSA, Hercules, Montra ) உள்ளிட்ட பல நிறுவனங்களை முருகப்பா குழுமம் நடத்தி வருகிறது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன், கோவையின் புகழ்பெற்ற சாந்தி கியர்ஸ் நிறுவனத்தையும் முருகப்பா குழுமம் கையகப்படுத்தியது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக முருகப்பா குழுமம் மாறியுள்ளது.

இது தொடர்பாக, பார்க்லேஸ் பிரைவேட் கிளையன்ட்ஸ் ஹாருன் அமைப்பு வெளியிட்டுள்ள (Barclays Private Clients Hurun India Most Valuable Family Businesses) பட்டியலின்படி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 4.7% அதிகரித்து ரூ. 3.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், நடப்பாண்டில் இந்தியாவின் 7வது பணக்கார நிறுவனமாக முருகப்பா குழுமம் (தமிழகத்தில் முதலிடம்) மாறியுள்ளது.‘ தமிழகத்தின் பணக்கார நிறுவனங்களில் முதலிடத்தில் இருந்த ஹெச்.சி.எல்- லின் சொத்து மதிப்பு 38 சதவிகிதம் குறைந்து 2.91 லட்சம் கோடியாக குறைந்துள்ளது!

HCL
HCL

இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 25.8 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 8.5% சரிவைக் கண்டது. எனினும், பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள பிர்லா குழுமத்தை விட ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மூன்று மடங்கு அதிகமாகவே உள்ளது. அம்பானி, குமாரமங்கலம் பிர்லா மற்றும் ஜிண்டால் குழுமம் ஆகிய நாட்டின் முன்னணி மூன்று நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 42 லட்சம் கோடி ஆகும். பஜாஜ் குழுமம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7.7. லட்சம் கோடி ஆகும். புகழ்பெற்ற மஹிந்த்ரா நிறுவனம் 5.5 லட்சம் கோடி மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம், இந்தப் பட்டியலில் 6வது இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 4.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பைக் கொண்ட விப்ரோ (Wipro) நிறுவனம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. 12% வளர்ச்சியுடன் ரூ. 2.48 லட்சம் கோடி மதிப்பைக் கொண்ட ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints) நிறுவனம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் முன்னணி 10 நிறுவனங்களான இவற்றின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70.5 லட்சம் கோடியாகும். அதோடு, இந்தியாவிலுள்ள முதல் 300 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.38 லட்சம் ( 1.46 டிரில்லியன்)கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நாடாக கணக்கீட்டில் கொண்டால், சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை விட இது அதிகமாகும்.

Puthuyugam
www.puthuyugam.com