FIFA 2026 
விளையாட்டு

சமனில் முடிந்த சமர்! #Portugal vs Dr Congo #FIFA

போர்ச்சுகல்லின் முதலாம் கோலை சமனாக்க முத்துசாமி எடுத்த முன்னெடுப்பு என்ன?

கார்மல்

அவன் கால்களுக்கு வந்து செல்லும் போதெல்லாம் மூட்டுசாமியென்று (moutoussamy ) வர்ணனையாளர் உச்சரிக்கிறார்.

ஆட்டநேரம் முழுவதும் நின்றாடி பின்களக் காப்புப் பணியை செம்மையாகச் செய்தார் சாமுவேல் முத்துசாமி.

போர்ச்சுகல்லின் முதலாம் கோலை சமனாக்க முத்துசாமி எடுத்த முன்னெடுப்பு என்ன?

சுமார் 68000 பார்வையாளர்களால் நிறைந்திருந்த அவ்ஸ்டன் மைதானம் போர்ச்சுகல் வண்ணத்தைப் போர்த்தியிருந்தது. போர்ச்சுகல் நாட்டவரைத் தவிர்த்து உலக இரசிகர்களின் கவனமும் ரொனால்டோ என்ற பிம்பத்தின் மீதே படரந்த்து.

ரொனால்டோ காலடியைத் பந்து வந்தடையும் போதெல்லாம் பார்வையாளர் மாடம் கிடுங்கியது .

அதுவும் ஆறாம் நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நெவஸ் தலையிடி மூலம் ஈட்டிய கோலில் டெசிபல் அளவு இரட்டிப்பானது .

ஆனாலும் காங்கோ கலங்கவில்லை.

1974க்கு பிறகு வையக்களத்துக்கு வந்திருக்கிறார்கள். காத்தல், கடத்தல் , குறிவைத்தல் என்பதில் போர்ச்சுகலுக்கு இணையாகவே களமாடி இடியாப்பச்சிக்கலை ஏற்படுத்தினர்.

முன்பாதி முடிவுறும் நேரம் முத்துசாமி இலக்கை நோக்கி பந்தைத் முடுக்க அதை போர்ச்சுகல் தடுக்க பந்து வெளியறி மூலைத் தாக்குதலுக்கான வழிசெய்தது.

முன்களத்தில் நடந்த இந்த களேபரத்தின் தொடர்ச்சியாக தொட்டடுத்து மற்றொரு மூலைவாய்ப்பும் காங்கோவுக்குக் கிட்டியது.

முதல்பாதி முடியும் நொடியில் வலப்புற மூலையிலிருந்து காங்கோவன் ஆர்தர் மாசாக்கூ தொடுத்தப் பந்தை விஸ்ஸா என்ற வீரன் தலையில் வாங்கி வலைக்குள் செலுத்த களம் ஓன்றுக்கு ஒன்றென சமனாகியது .

முறுபாதியில் போர்ச்சுகலுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு ஆஃப் சைடாக மாறியது.

காங்கோவின் பலமே அதன் பின்கள பாதுகாப்பரண்தான்.

பின்களத்தில் நான்கு பேர் நூல் பிடித்தமாதிரி அமைத்தக் காப்பரணை போர்ச்சுகல்லால் ஊடறுக்கமுடியவில்லை.

ரொனால்டோவக்கு கிடைத்த பல வாய்ப்புகளும் கூட கால்கூடவில்லை.

காங்கோ இரசிகர்கள் உலக கால்பந்துக் களத்தில் முதல் முதலாக பதிவுசெய்த கோலைக் கொண்டாட போர்ச்சுகல்லின் இறுக்கமான முகத்துக்குமேலே முடிவடைந்தது இந்தப் பிரிவின் முதல் ஆட்டம்.

வர்லாம் வாங்கோ காங்கோ.