PhD MEMES 
கிரேஸி கார்னர்

Ph.D நகைச்சுவைகள்..!

இந்த ஜோக்ஸ் பரவலாகிறது என்றாலே, அந்தச் சமூகம் கல்வியில் கண்ணுங் கருத்துமாக இறங்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் பொருள்.

ஆதி தாமிரா

நகைச்சுவை பல்வேறு வடிவங்கள், வகைமைகள் கொண்டவை. கொஞ்ச காலமாக அதிலொரு புதிய வகைமையைப் பார்க்க முடிகிறது. அதுதான் Ph.D ஜோக்ஸ்! இதுவொன்றும் புதிய வகைமை அல்ல, முன்னேறிய நாடுகளில் ஏற்கனவே இருப்பதுதான் என்றாலும், நம் சமூகத்தில் இப்போதுதான் பரவலாகக் கவனிக்கப்படுகிறது.

இந்த ஜோக்ஸ் பரவலாகிறது என்றாலே, அந்தச் சமூகம் கல்வியில் கண்ணுங் கருத்துமாக இறங்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் பொருள்.

Ph.D (Doctor of Philosophy), முனைவர் ஆய்வுப்பட்டம் என்பது எந்தவொரு கல்விப் பிரிவிலும், முதுகலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்த மாணவர்கள், அதற்குரிய தகுதித் தேர்வுகள் அல்லது நுழைவுத் தேர்வுகளை எழுதி Ph.D செய்ய உரிய பல்கலைக் கழகங்களில் விண்ணப்பிக்கலாம். கவனியுங்கள், ’படிக்க’ அல்ல ’செய்ய’!

Ph.D என்பது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தைப் படித்து, அதில் தேர்ச்சியடைந்து ஒரு பட்டத்தைப் பெறுவதல்ல. மாறாக, அவர்கள் விரும்பிய துறையில், அந்தத் துறையின் புதிய ஆழத்தை, அறிவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லக்கூடிய ஆய்வுப் பணியாகும்.

இதை உண்மையான அறிவுத்தேடல் மற்றும் ஆய்வு மனம் கொண்டோர் செய்வதே அவர்களுக்கும், அவர்கள் செய்யும் ஆய்வுகளுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும். அப்படியல்லாமல், கௌரவத்துக்காகவோ, பதவி உயர்வுக்காகவோ கூட செய்யலாம்தான். அப்படிச் செய்வோமானால், அது நம்மை ஒருவழி பண்ணாமல் விடாது, அது அத்தனைச் சிரமமானது என்று ஆய்வு மாணவர்கள் பகிர்வதைப் பார்க்க முடிகிறது. இதையொட்டித்தான் இவ்வகை நகைச்சுவைகள் இப்போது பரவலாக இணைய தளங்களில் காண முடிகிறது.

சில உங்கள் பார்வைக்கு: