Puthuyugam Tamil New Year Programs 
சினிமா

புதுயுகத்தில் மனம் கவரும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்!

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நமது புதுயுகம் டி.வியில் மக்கள் மனம் கவரும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

வெண்ணிலா

நமது புதுயுகத்தில், நாளை ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் களைகட்டித் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் சிறப்பு தினங்களில் புதுயுகத்தின் நிகழ்ச்சிகளுக்கென்றே தனிப்பட்ட நேயர் படை உண்டு. அவர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக நாளை தமிழ்புத்தாண்டை முன்னிட்டு நமது புதுயுகம் டி.வியில் மக்கள் மனம் கவரும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போமா?

புதுயுகம் தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சிகள்

காலை 8 மணிக்கு அழகிய அபிநயங்களால் சித்திரையை வரவேற்கும் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி... "சித்திரையே வருக..!"

காலை 9 மணிக்கு தமிழகத்தின் முன்னணி ஜோதிடர்கள் வழங்கும் தமிழ்புத்தாண்டு ராசிபலன்கள் 2026

காலை 11 மணிக்கு எம்.கே. பாலாஜி பாடும் இளமை துள்ளும் பாடல்களுடன் "பாட்டுப் பாட வா..!"

Puthuyugam Tamil New Year Programs

மதியம் 12 மணிக்கு பனங்காட்டில் அரங்கேறிய பிரமாண்ட கொண்டாட்டம்... பனைத் திருவிழா

மதியம் 1.30 மணிக்கு சாதனை பெண்களை கௌரவிக்கும் பிரமாண்ட விழா சக்திவிருதுகள் 2026

மதியம் 3.30 மணிக்கு தமிழ்புத்தாண்டு ஸ்பெஷலாக LIK படத்தை பற்றிய ஒரு அலசல்...சினிமா 2.0

Dr. Narayanan, Singer

மாலை 4 மணிக்கு பாடகர் டாக்டர். நாராயணனின்... மனதை மயக்கும் மெலடிகள் அதிரடி ஹிட் பாடல்கள் நிரம்பிய "சங்கீதமே சந்தோஷமே"

இரவு 7மணிக்கு ஜேம்ஸ் வசந்தன் குழுவினர் வழங்கும் பெண்மையைப் போற்றும் பாடல்கள்

Puthuyugam Tamil New Year Programs

இரவு 8 மணிக்கு தமிழ் திரையுலகமே திரும்பி பார்க்க வைத்த மெஹாஹிட் படமான 'ஊமைவிழிகள்' படத்தின் பிரமாண்ட வெற்றி ரகசியங்களை பகிர வருகிறார் இயக்குநர் அரவிந்த்ராஜ்.

நமது புதுயுகத்தில் தமிழ்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்.