Classroom task in Biggboss 9 @jiohotstar
BiggBoss 9

விளையாட்டு விளையாட்டா இருக்கணும்! #Biggboss Day 52

இன்னொரு புறம் சபரி, ’உடம்பு சரியில்லை மாத்திரை போட வேண்டும் என்னுடைய மாதுளம் பழத்தை யார் எடுத்தது?’ என்று பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்தார்.

ஆதி தாமிரா

பள்ளிக்கூடம் டாஸ்க்கில், பல குழப்பங்கள் நடந்துகொண்டிருந்தன. முதலில் விக்ரமின் திருவிளையாடல்! சுபியின் முடியை ரெண்டு இஞ்சுக்கு சிறிது வெட்டி வைத்துக்கொண்டு, அதை வைத்து பாருவின் முடியை வெட்டிவிட்டேன் என்று, பிராங்க் செய்து கொண்டிருந்தார் விக்ரம். இது யார் முடி என்று அழுதபடியே, 

பாரு: விளையாட்டு விளையாட்டா இருக்கணும். முடியை வெட்டி விளையாடுவதையெல்லாம் விளையாட்டா எடுத்துக்க முடியாது. இதெல்லாம் விளையாட்டு இல்லை. இது பெர்சனலா ஒருத்தரை ஹர்ட் செய்வதாகும்’ என்று சீரியஸாகி கத்த ஆரம்பித்தார். 

அடுத்து, வியானா, அமித்தின் ஒற்றைக் கால் ஷூக்களையும் மறைத்து வைத்துவிட்டார் போலிருக்கிறது. அமித் சற்று நேரம் கெஞ்சிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றதும், 

அமித்: விளையாட்டு விளையாட்டா இருக்கணும். ஒற்றைக் கால் ஷூவை எடுத்து ஒளித்து வைப்பதையெல்லாம் விளையாட்டா எடுத்துக்க முடியாது. ஒற்றைக்கால் ஷூ போட்டு நடந்து எனக்கு முதுகு வலிக்குது. இதெல்லாம்விளையாட்டே இல்லை. இது பெர்சனலா ஒருத்தரை ஹர்ட் செய்வதாகும்’ என்று சீரியஸாகிக் கத்திக்கொண்டிருந்தார். 

இன்னொரு புறம் சபரி, ’உடம்பு சரியில்லை மாத்திரை போட வேண்டும் என்னுடைய மாதுளம் பழத்தை யார் எடுத்தது?’ என்று பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்தார். அரோராதான் அதை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அவரிடமே வந்து யார் எடுத்தது என்று தீவிரமாக விசாரித்தும் கிடைக்கவில்லை. அரோராவும், ஆட்கள் இடத்தைக் காலி செய்தால் நைசாக எடுத்துக் கொடுத்து விடலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை. சபரி, டெரர் மோடுக்குப் போய்,  

சபரி: விளையாட்டு விளையாட்டா இருக்கணும். ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை, மாத்திரை போட வேண்டும், மாதுளம்பழத்தை சாப்பிட்டால்தான் மாத்திரை போடமுடியும் என்று கதறிய பின்னும் இப்படி கொடூரமாக நடப்பது விளையாட்டே இல்லை. இது பெர்சனலா ஒருத்தரை ஹர்ட் செய்வதாகும்’ என்று சீரியஸாகி கத்திக்கொண்டிருந்தார். 

அடுத்து, மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்டுகளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, சுபிக்கு மட்டும் தராமல் எஃப்ஜே மறைத்து வைத்து விளையாடினார். இதில் என்னடா பிரச்சினை வரப்போகிறது என்று நினைத்தால், அதற்கு சுபி டென்ஷனாகி கதறி அழுதபடியே,  

Strike in School

சுபி: விளையாட்டு விளையாட்டா இருக்கணும். பிக்பாஸ் தரும் ஐடி என்பது எவ்வளவு முக்கியமான விசயம் தெரியுமா? அதில் என் முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் தாங்கவில்லை, இப்படி ஒருவரின் உணர்வுகளோடு விளையாடுவது கொஞ்சமும் சரியில்லை. இதெல்லாம் விளையாட்டே இல்லை. இது பெர்சனலா ஒருத்தரை ஹர்ட் செய்வதாகும்’ என்று சீரியஸாகி கத்திக்கொண்டிருந்தார். 

அடுத்து லஞ்ச் கொடுப்பதிலும் இதே மாதிரியான சிக்கல். பசியில் லைன் கட்டி நான்கு பேர் நின்று சாப்பாடு கேட்ட பிறகும், பத்து பேரும் வந்த பிறகுதான் சாப்பாடு தருவேன். அப்போதுதான் ஈக்குவலாக பிரிக்கமுடியும் என்று எஃப்ஜே சொல்லிவிட, ரம்யா கண்ணீர் மல்க,  

ரம்யா: விளையாட்டு விளையாட்டா இருக்கணும். சாப்பாடு தருவதற்கு எதற்கு எல்லோரும் வரவேண்டும்? முதலில் வந்தவர்களுக்கு தர வேண்டியதுதானே? ஒரு ஆள் பசியில் இருக்கும் போது எப்படி இப்படியெல்லாம் இரக்கமில்லாமல் சொல்ல முடிகிறது? இதெல்லாம் விளையாட்டே இல்லை. இது பெர்சனலா ஒருத்தரை ஹர்ட் செய்வதாகும்’ என்று சீரியஸாகி கத்திக் கொண்டிருந்தார். 

இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தைப் பர்சனலாக எடுத்துக்கொண்டு இந்த மொத்த டாஸ்க்கையும் குழப்பியடித்துக் கொண்டிருந்தார்கள். பிரச்சினை செய்தவர்கள், பிரச்சினைக்கு ஆளானவர்கள் என ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் போய் அழுதுகொண்டிருந்தார்கள். இப்போ அப்படி என்னடா நடந்துடுச்சு? என்று நமக்கே குழப்பம் ஏற்படும் அளவுக்கு ஆகிப்போனது! 

யார் எதை, பர்சனலாக எடுத்துக்கொண்டு ஒப்பாரி வைப்பார்கள் என்று தெரியாததால், எல்லோரும் ஒரு கட்டத்தில் அமைதியாக வகுப்பில் உட்கார்ந்து பாடம் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கனி, சின்சியராக திருக்குறள் பாடமெடுக்க, எல்லோரும் மனப்பாடம் செய்து ஒப்பித்தார்கள். இப்படியே போனால், இவர்கள் எல்லோரும் ஒழுங்காகப் படித்து, பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கே தயாராகிவிடுவார்கள் போலிருக்கிறது.  

இவ்வளவு கூத்துகளுக்கு நடுவே முந்தின நாள், தான் எப்பேர்ப்பட்ட ஒரு டெரர் என்பதையே மறந்துபோய் ரொம்ப சின்சியராக தனி ஆளாக பாரு, எல்லோருக்கும் சமைத்துக் கொண்டும், பாத்திரங்களைத் தனியாளாக அலம்பிக்கொண்டும் இருந்தார். பாரு சமைத்த எதையும் வாயில் வைக்க முடியவில்லை என்று சபரியும், வினோத்தும் கதறியது வேறு விஷயம்!  

நேற்று முழுவதும் கிச்சன் வேலைகள் அனைத்தையும், தான் ஒருத்தியே செய்ததால் மறுநாள் காலை உடம்பு சரியில்லை, அதனால் இன்று எஃப்ஜே மட்டுமே அதை செய்ய வேண்டும் என்பது பாருவின் நினைப்பு. அதை நேரடியாகச் சொல்லாமல், ’கிச்சன் வேலைகளை இரண்டு பேரும் தானே செய்ய வேண்டும். நேற்று நீ செய்யவில்லை’ என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். அதனால், எஃப்ஜே, ‘சரி, ரெண்டு பேரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள், வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்று சொல்லி பாருவைக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.