விமானப் பணிப்பெண்ணாக என்னென்ன தகுதிகள் வேண்டும் தெரியுமா?

ஏர்ஹோஸ்டஸ் ஆக வேண்டுமென்பது பல இளம் பெண்களின் கனவாக இருக்கும். ஆனால், அதற்கு என்ன அடிப்படை தேவை , யாரை அணுகுவது ? என்ன செய்வது என்பதுதான் பலரும் அறியாத விஷயம்.
air hostess
air hostess UAPL
Published on

ஏர்ஹோஸ்டஸ் ஆக வேண்டுமென்பது பல இளம் பெண்களின் கனவாக இருக்கும். ஆனால், அதற்கு என்ன அடிப்படை தேவை , யாரை அணுகுவது ? என்ன செய்வது என்பதுதான் பலரும் அறியாத விஷயம். ஏர்ஹோஸ்டஸ் ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? தகுதிகள் என்னவென்று இந்த கட்டுரையில் காணலாம். 

விமான பயணத்தின் போது, பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதுதான் விமானப்பணிப்பெண்களின் முக்கிய பணி. இது தவிர, நெருக்கடியான காலக்கட்டத்தில் செயல்படுவது, முதலுதவி செய்வது, விபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களிலும் விமானப்பணிப் பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உலகம் முழுவதும் பயணிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த பணியில் அதிக சம்பளமும் கிடைக்கும். நல்ல வளர்ச்சியும் கிடைக்கும். 

விமானப்பணிப் பெண்களாக 12ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பெண்கள் 155 செ.மீ, ஆண்கள் 170 செ.மீ குறைந்தபட்ச உயரம் இருக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். மெடிக்கல் பிட்னெஸ், வேலிட் பாஸ்போர்ட், முக்கியமாக சிறந்த தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். உள்நாட்டு விமான நிறுவனத்தில் சேர 18 வயது முதல் 26 வரையும் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் சேர 21 முதல் 26 வயது வரை வயது வரம்பாக உள்ளது. 

Diploma in Aviation Hospitality & Travel Management (6-12 months, DGCA approved)

Certificate in Cabin Crew Training

Bachelor's in Aviation Management போன்ற ஏதாவது ஒரு படிப்பை படித்திருந்தால் மிகவும் நல்லது. 

இந்த பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் ரெஸ்யூமை அனுப்பலாம்.
பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் திறனறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வில் பாஸாக வேண்டும்.
தொடர்பு மற்றும் குழுப்பணி திறன்களை மதிப்பிடுவதற்கான குழு விவாதத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆளுமை மற்றும் திறன் மதிப்பீட்டிற்கான தனிப்பட்ட நேர்காணல் நடைபெறும். 
உடல் தகுதிக்கான மருத்துவத் தேர்வு ஆகியவை உண்டு. 
தேர்வு செய்யப்பட்டவுடன் 2-3 மாத பயிற்சி வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு? 

உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக இருந்தால் ஆண்டுக்கு 4 முதல் 6 லட்சமும் வெளிநாட்டு விமான நிறுவனமாக இருந்தால் ஆண்டுக்கு 5.5 முதல் 16 லட்சம் வரையும் சம்பளமாக கிடைக்கும். இது தவிர, பிரைவேட் ஜெட்களில் பணியாற்றினால் ஆண்டுக்கு 6 முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெறலாம். பொதுவாக, இந்த சம்பளம் பணி புரியும் நிறுவனங்கள், இடம் , அனுபவத்தை பொறுத்து மாறுபடும்

Puthuyugam
www.puthuyugam.com