

100 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை நிறுவுவது ஒரு சாதாரண பணியல்ல, அதற்கு கவனமான திட்டமிடல், சரியான உபகரணங்கள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் தேவை. கொடி கம்பத்தின் அளவு மற்றும் எடை காரணமாக, இது அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பொதுவான வழிமுறைகளாகும். இருப்பினும், இந்தப் பணி எப்போதும் ஒரு கட்டுமான பொறியாளரின் முன்னிலையில், அவரின் வழிகாட்டுதலின் படியே நடக்க வேண்டும்.
1. கொடி கம்பத்தை நிறுவிட திறந்தவெளியில், தடையற்ற, சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். மேலே மின் கம்பிகள், மரங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் குறித்தும், குழி தோண்டுமிடத்தில் தரையடி நீர்க்குழாய்கள், மின் பாதைகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
அவ்விடத்தில் கொடிக்கம்பத்தை நிறுவிட முறையான அரசு அனுமதி பெற வேண்டும்.
100 அடி கொடிக்கம்பத்தின் பாதுகாப்பில் காற்றின் அழுத்தம் ஒரு முக்கியமான கேள்வியாகிறது. கொடிக் கம்பமும் அதன் அடித்தளமும் உங்கள் பகுதியில் உள்ள அதிகபட்ச காற்றின் வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு கட்டுமானப் பொறியாளரால் மட்டுமே உங்கள் பகுதிக்கு ஏற்ற காற்றின் சுமை திறனை (Wind load) தீர்மானித்து அதற்கேற்ப அடித்தளம் அமைக்க உதவ முடியும்.
கொடி கம்பத்தை தயாரித்த நிறுவனம் வழங்கிய நிறுவல் வழிமுறைகளை (Installation procedure) எப்போதும் பார்க்கவும். அவை அடித்தளத் தேவைகள் மற்றும் அசெம்ப்ளி பற்றிய துல்லியமான விவரங்களைக் கொண்டிருக்கும்.
அடித்தளம் அமைக்கத் தேவையான ஆழம் கொடி கம்பத்தின் உயரத்தில் குறைந்தபட்சம் 10% இருக்க வேண்டும். அதாவது 10 அடி ஆழம் தேவை. குழியின் விட்டம், கொடி கம்பத்தின் அடியின் விட்டத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்
கொடுக்கப்பட்டுள்ளவை, கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பொதுவான வழிமுறைகளாகும். இருப்பினும், இந்தப் பணி எப்போதும் ஒரு கட்டுமான பொறியாளரின் முன்னிலையில், அவரின் வழிகாட்டுதலின் படியே நடக்க வேண்டும்.
6. பெரிய கொடிkகம்பங்களுக்கு பொதுவான மற்றும் வலுவான முறை கான்கிரீட் அடித்தளமாகும். 10 அடி ஆழம் கொண்ட தரைக்குழாயைப் பதித்து அதைச் சுற்றி சரியான கலவையில் (3000 PSI) உருவாக்கப்பட்ட கான்கிரீட்டைக் கொண்டு தளம் அமைக்க வேண்டும். தரைக்குழாய் குழியின் மையத்திலும், மில்லிமீட்டர் துல்லியமாக சாய்வு ஏதுமின்றி கிடைமட்டத்தில் அமைய வேண்டும். கிடைமட்ட அளவு 1மிமீ பிசகு ஏற்பட்டால் கூட கொடிக்கம்பத்தின் உயரம் காரணமாக ஆபத்தானதாகிவிடும். மேலும் கான்கிரீட் காயத் தேவையான கால அளவு மிக முக்கியமானது. ஓரிரு நாட்கள் காத்திருப்பு அவசியம்.
7. 100 அடி கொடிக்கம்பம் பொதுவாக பல பிரிவுகளால் ஆனது. முதலில் அவற்றை தரையில் வைத்து கிடைமட்டமாக அசெம்பிள் செய்ய வேண்டும். உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றி, வரைபடங்களின்படி நிறுவ வேண்டும்.
8. அசெம்பிள் செய்யப்பட்ட பின்னர் ஏறத்தாழ 1.2 டன் எடை கொண்ட கம்பத்தை, சரியான எடைதூக்கும் திறன் கொண்ட ஒரு கனரக கிரேன் மூலமாக தரைப்பகுதி குழாயோடு இணைக்க வேண்டும். கிரேன் இயக்குபவர் சரியான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், கம்பத்தை தரைப்பகுதியோடு இணைப்பதற்கு தொழில்முறை ரிக்கிங் குழுவினர் தேவைப்படுவார்கள். கொடிக்கம்பத்தின் அளவு மற்றும் எடை காரணமாக, சரியான உபகரணங்கள் மற்றும் அனுபவம் இல்லாமல் உயர்த்துவது மிகவும் ஆபத்தானது.
9. கொடி கம்பத்திற்கும் தரைக் குழாய்க்கும் இடையிலான இடத்தை காய்ந்த மணலால் நிரப்ப வேண்டும். இது கம்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பின்னர், நீர் உள்ளே நுழைவதைத் தடுக்க, மேற்புறத்தை நீர்ப்புகா சிமென்ட் அல்லது கால்கிங் கொண்டு பூச வேண்டும்.
10. நிறுவிய பின்னர், அனைத்து கூறுகளும் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும், கொடி கம்பம் சரியாக செங்குத்தாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், கிரேனிலிருந்து கம்பத்தை விடுவிக்க வேண்டும்.