மகாளய அமாவாசை

முன்னோர்களின் ஆசியை முழுமையாகப் பெறும் எளிய வழிமுறைகள்
Tarpanam a significant ritual performed for ancestors is often done on riverbanks on days like Mahalaya Amavasya
Tarpanam ceremony google image
Published on

புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆசியைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் நாம் செய்யும் சிறிய வழிபாடுகூட நம் தலைமுறைக்கும், நம் குடும்பத்திற்கும் பெரும் நன்மைகளைத் தரும். மகாளய அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் எளிமையான வழிபாட்டு முறைகள் குறித்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஹரி அவர்கள் இங்கே விளக்கமாகச் சொல்கிறார்.

Astrologer Hari
Astrologer HariOwn

மகாளய அமாவாசையின் முக்கியத்துவம்:

மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்காக ஒதுக்கப்பட்ட 15 நாட்களாகும். இந்த நாட்களில் நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினருக்கு ஆசி வழங்குகிறார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நாம் செய்யும் திதி அவர்களின் ஆத்மாக்களை அமைதிப்படுத்தி, நம் குடும்பத்திற்கு சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.

வழிபாட்டு முறைகள்:

  1. காலை குளியல்: மகாளய அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம். முடிந்தால், ஆறு அல்லது புனித நதிகளில் குளிப்பது மிகவும் சிறப்பு.

  2. திதி மற்றும் தர்ப்பணம்: திதி செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் எளிமையாகத் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் என்பது எள் மற்றும் நீர் கொண்டு முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவது.

  3. அன்னதானம்: மகாளய அமாவாசை அன்று அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியமானது. குறிப்பாக, பசு, காகம், நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது.

  4. கோயிலுக்குச் செல்லுதல்: சிவன் அல்லது பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யக்கூடிய தலங்கள் (உதாரணம்: ராமேஸ்வரம்) மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

  5. முன்னோர்களை நினைத்து வழிபடுதல்: இந்த நாளில், முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபடுவது அவசியம். வீட்டில் சமைத்த உணவை முன்னோர்களுக்குப் படைத்து, காகங்களுக்கு வைத்த பிறகு சாப்பிடுவது சிறந்தது.

Mahalaya Amavasya 2025 Rituals & Significance
Mahalaya Amavasya 2025 Rituals & SignificanceAI Image

இந்த வழிபாடுகளைச் செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும். மேலும் நம் குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

Puthuyugam
www.puthuyugam.com