Nafisa Ali
Nafisa AliBollywood Hungama

'என்னைப்போல முட்டாளாக இருக்காதீர்கள்'- புற்றுநோய் பற்றி நபீஷா அலி

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, மருத்துவ அறிவு நமக்கும் இருக்க வேண்டுமென நபீஷா அலி கூறியுள்ளார்.
Published on

இந்தியில் கடந்த 1979ம் ஆண்டு வெளியான ஜூனூன் படத்தில் அறிமுகமானவர் நபீஷா அலி. இவர், முன்னாள் இந்திய அழகியும் கூட. மேஜர் சாப், பிக் பி, யம்லா பக்லா தீவானா உட்பட பல படங்களில் நடித்தவர். சசி கபூர், அமிதாப்பச்சன், தர்மேந்திரா உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். சமூக செயற்பாட்டாளரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான இவரை புற்றுநோய் பாடாய்ப்படுத்தி வருகிற்து. எனினும், அவர் மனம் தளராமல் போராடி வருகிறார். தற்போது புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் இவரை இரு முறை புற்றுநோய் தாக்கியுள்ளது.

இது குறித்து நபீஷா அலி கூறியதாவது , "கடந்த 2018ம் ஆண்டு நான் கோவாவில் இருந்த போது, வழக்கமான நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன். ஒரு முறை நடையிற்சி சென்ற போது, எனது உடலில் மாற்றத்தை உணர்ந்தேன் . சட்டென்று உடல் சோர்வடைந்தது. அப்போதே, ஏதோ தீவிரமான பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பல மருத்துவர்களை அணுகினேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை. சில டாக்டர்கள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தந்தனர்.

Cancer Awareness
Cancer AwarenessAI GENERATED

சில டாக்டர்கள் எனக்கு காசநோய் என்று சொன்னார்கள். ஆனால், நான் நம்பவில்லை. அவர்களிடத்தில் காமெடிக்காக 5 ரூபாய் பந்தயம் கட்டினேன். ரிப்போர்ட்டுகள் வந்த போது, நான்தான் ஜெயித்தேன். புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவும் Pet scan ( Positron Emission Tomography scan) எடுக்கும்படி என்னிடத்தில் சொன்னார்கள்.

டாக்டர்களின் தவறான நோயறிதலும் குழப்பமும் என்னை ஆழமாக பாதித்தது. இதன் காரணமாகவே, புற்றுநோய் குறித்தும் அதற்கான விழிப்புணர்வில் ஈடுபட நான் முடிவெடுத்தேன். புற்றுநோயை எளிதாக கண்டுபிடிக்கும் சோதனைகள் உள்ளன. அவற்றைப் பற்றி உங்கள் மருத்துவர்களிடம் கேளுங்கள். சிகிச்சை முறைகளை புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக பணத்தை செலவிடாதீர்கள். டாக்டர்கள் எனது உடலில் இருந்த கட்டியை ஊசியால் குத்தி உடைத்தனர். அப்போதுதான் புற்று நோய் உடல் முழுவதும் பரவி, 3வது கட்டத்தை எட்டியது.

புற்றுநோயை முன்னரே கண்டறியும், CA 125 பரிசோதனைக்கு ரூ.1,200 மட்டுமே செலவாகும். இதை யாரும் எனக்கு அதை பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக, ரூ.25 ஆயிரம் கட்டி PET ஸ்கேன் எடுக்க அனுப்பினர். அதனால்தான் நான் இப்போது , புற்றுநோய் சிகிச்சை பற்றி விளக்கமாக சொல்கிறேன். என்னைப் போல போல முட்டாள்த்தனமாக யாரும் இருக்காதீர்கள்.

சிகிச்சையளிப்பதில் தாமதம் காரணமாக புற்றுநோய் உடல் முழுவதும் பரவி விட்டதாக மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான், 'பரவாயில்லை, நான் அதை எதிர்த்துப் போராடுவேன்' என்றேன். ஒரு முறை கீமோகிராபி செய்த பிறகு, எனது தலைமுடி கொத்தாக எனது கையில் திடீரென்று வந்தது. அப்போது, அதைக் கண்டு உண்மையிலேயே நான் அழுதேன்.

கடந்த 7 ஆண்டுகளாக 3 ஆம் கட்ட புற்றுநோயுடன் போராடி மீண்டேன். இப்போது, 4 ஆம் கட்ட புற்றுநோய் வயிற்றில் பரவியுள்ளது . நான் இந்த முறை பயப்படவில்லை. கீமோகிராபி சிகிச்சையில் உள்ளேன். எனது மனமும் உடல் வலிமையும் பெற பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன் 'என்றார்.

நபீஷா அலி கடந்த 2022ம் ஆண்டு வெளியான வுன்சாய் படத்தில் அமிதாப்புடன் நடித்திருந்தார். இவர் தன் மனபலத்தால் இந்நோயிலிருந்து மீள வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com