என்னடா கோழிக்கோடு பிரியாணிக்கு வந்த சோதனை..!

இந்த பிரியாணியை கைமா அரிசியில் செய்தால்தான் சுவை மிகுந்ததாக இருக்கும். மேலும், கைமா அரிசியில் பிரியாணி செய்தால் அது நீண்ட நேரத்துக்கு கெட்டுப் போகாமல் அதே சுவையுடன் இருக்கும்.
Kozhikode Biriyani
Kozhikode Biriyani
Published on

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க பிரியாணி முக்கியமான உணவு . நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தயார் செய்யப்படும். அதில் கேரளா பிரியாணிக்கு தனிச்சிறப்பானது. அதில், முக்கியமானது கோழிக்கோடு கைமா பிரியாணி. நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வித்தியாசமான சுவை கொண்ட பிரியாணி இது.  அதிக காரம் இல்லாமல் ,இயற்கையான  மசாலாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இந்த பிரியாணி சமைக்கப்படுகிறது. காய்கறிகள், மட்டன், கோழி, மீன் ஆகியவற்றுடன் சேர்த்து செய்யலாம்.சீரகம், ஏலக்காய், கிராம்பு போன்றவை ஒன்றாக அரைக்கப்பட்டு இதில் சேர்க்கப்படும். பாசுமதி , ஜீரகசம்பா அல்லது கைமா அரிசியில் இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது. கோழிக்கோடு டம்ப் பிரியாணி அல்லது நெய்ச்சோறு என்று அழைக்கப்படும், இந்த பிரியாணியை கைமா அரிசியில் செய்தால்தான் சுவை மிகுந்ததாக இருக்கும். மேலும், கைமா அரிசியில் பிரியாணி செய்தால் அது நீண்ட நேரத்துக்கு கெட்டுப் போகாமல் அதே சுவையுடன் இருக்கும். 

ஆனால், தற்போது கோழிக்காடு பிரியாணியின் விலை தாறுமாறாக உயரதொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கைமா அரிசியின் தாறுமாறான விலை உயர்வே. இது நாள் வரை இந்த அரிசி கிலோ ரூ. 85 முதல் 90 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது , கைமா அரிசியின் விலை ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.110 விலை அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பர்தமான் பகுதியில் இருந்துதான் கேரளாவுக்கு கைமா அரிசி வருகிறது. தற்போது, இயற்கை இடர்பாடுகளால் விளைச்சல் பாதிக்கப்படுவதும், வெளிநாடுகளில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் இந்த அரிசியின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள் பாசுமதி, ஜீரகசம்பா போன்ற அரிசியை பயன்படுத்தி கோழிக்கோடு பிரியாணியை தயாரிக்க தொடங்கியுள்ளனர். 

Biriyani
Biriyani

அதோடு, இந்த பிரியாணியை தயாரிக்க தேங்காய் நாரைதான் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனர். தற்போது, ஒரு கிலோ தேங்காய் நார் விலை ரூ. 33 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளுக்கு தேங்காய் நாரை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளதால்,  இதுவும் கிடைப்பதில்லை. இதனால், கோழிக்கோடு பிரியாணி சமைப்பதில் ஹோட்டல்கள் பல்வேறு  நெருக்கடிகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். 

கேரளாவில் கோழிக்கோடு பிரியணியை தவிர கண்ணூர் பிரியாணி, தலச்சேரி பிரிணாயி, மலப்புரம் பிரியாணி, பொன்னானி பிரியாணி, கொச்சி கயீஸ் பிரியாணி, காலிகட் பிரியாணி, கொச்சி புதினா பிரியாணி , ஆலப்புழா பிரியாணி என பல வகைகளில் பிரியாணி ரகங்கள் உள்ளன.  

Puthuyugam
www.puthuyugam.com