நடிகை கீர்த்தி சரேஷின் தாயார் பெயர் மேனகா. இவர், நடித்த தமிழ்ப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' படம் முக்கியமானது. பின்னர், மலையாளப்படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து, மலையாள படத் தயாரிப்பாளர் சுரேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டார்.
கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் மேனகா நடித்துள்ளார். இவர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர்.மேனகாவுக்கு இரு மகள்கள் உண்டு. மூத்த மகளின் பெயர் ரேவதி சுரேஷ். இளையமகள்தான் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், மேனகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவரின் மூத்த மகள் ரேவதி சுரேஷ் செண்டை மேளம் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. நாட்டியம் முதல் செண்டை மேளம் வரை எனது மகள் கற்றுக் கொண்ட கலை என்றும் மேனகா பெருமையுடன் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அதாவது , ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழாவில் முதன்முறையாக தனது மகள் செண்டை மேளம் அடித்தது குறித்து மேனகா இவ்வாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து, பலரும் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது சகோதரி கீர்த்தி போல, ரேவதி நடிப்பைத் தேர்வு செய்யவில்லை. கேமராவுக்கு பின்னால், அவர் பன்முகத்திறமை கொண்டவர். பட தயாரிப்பு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பக் கலைஞர், நாட்டியக் கலைஞர், துணை இயக்குநர் என பல பரிணாமங்களில் அவர் பணியாற்றி வந்தார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடத்தில் நீண்ட காலமாக உதவி இயக்குநராகவும் இருந்து வருகிறார்.முதல்முறையாக 'தேங்கயூ' என்ற குறும்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். மரக்கார் அரபிக்கடலின் சிம்ஹம், வாஷி, பாரோஸ் போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். பல பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது திருவனந்தபுரத்திலுள்ள கலாமந்திர் பிலிம் அகாடமியின் தலைவராகவும் ரேவதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மற்றொரு வீடியோவும் இணையத்தில் வலம் வருகிறது. பிரபல நடிகை சுதா சந்திரன் பற்றிய வீடியோ அது. ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுதா சந்திரன், அங்கு பாடிய பாடல்களை கேட்டதும், திடீரென்று சாமி வந்தது போல ஆடினார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து அமைதிப்படுத்த முயன்றனர். இந்த சமயத்தில் ஒருவரின் கையை கடிக்கவும் சுதா சந்திரன் முயன்றார்.
தற்போது , 60 வயதான சுதா சந்திரன் மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். 1880ம் ஆண்டு அவரின் 16 வயதில் விபத்து ஒன்றில் சிக்கினார். விபத்தில் சுதாவின் இரு கால்கள் நசுங்கி போயின. இந்த சமயத்தில், அவரின் வலது காலை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, செயற்கை கால்பொருத்திக் கொண்டு நாட்டியம் ஆட தொடங்கினார். இன்று வரை நாட்டியக் கலையை அவர் கைவிடவில்லை. தமிழ்நா வயலூரைச் சேர்ந்த சுதா சந்திரன் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 1984ம் ஆண்டு 'மயூரி' என்ற தெலுங்கு படித்தில் அறிமுகமானார். விபத்தில் கால்களை இழந்த இளம் நாட்டியக்கலைஞரை சுற்றி நகரும் கதை இது. முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தமிழ், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வருகிறார்.