பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகரான தர்மேந்திரா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார். கிட்டத்ததட்ட 60 ஆண்டுகள் அவர் பாலிவுட்டில் நடித்து வந்தார்.
1960 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான தர்மேந்திரா, மிக விரைவிலேயே சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். காதல் நாயகன் தொடங்கி, ஆக்ஷன் ஹீரோ வரை பலவேடங்களில் நடித்து அசத்தினார். ‘ஷோலே’வில் அவர் நடித்த வீரூ என்ற கதாபாத்திரம், இன்றும் யாராலும் மறக்க முடியாதது. கடந்த 2012 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. தர்மேந்திரா கடைசியாக, 2024ம் ஆண்டு ஷாருக் கபூர் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடிப்பில் 'தேரி பாத்தோன் மே ஐசா உல்ஜா ஜியா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஷாஹித் கபூரின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுர், 2-வது மனைவி, நடிகை ஹேம மாலினி ஆவார்கள். முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மற்றும் இரு மகள்களும் உண்டு. இரண்டாவது மனைவியான ஹேமாமாலினிக்கு பிறந்தவர்கள் ஈஷா தியோல், அஹானா தியோல். ஹேமமாலினி நம்ம திருச்சியை சேர்ந்தவர். பாலிவுட்டில் தர்மேந்திராவும் ஹேமமாலினியும் இணைந்து கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்தனர். அதற்கு பிறகே, காதலித்து 1980ம் ஆண்டு மணந்து கொண்டனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இவர்கள் திருமணம் செய்து கொண்ட போது, பலரும் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்று பேசிக் கொண்டனர். பத்திரிகைகளும் வதந்திகளை வெளியிட்டன. ஆனால், இந்த தம்பதி இறப்பு வரை பிரியவே இல்லை. ஆத்மார்த்தமான அன்போடு வாழ்ந்து வந்தனர். அதோடு , ஹேமமாலினி மீது தர்மேந்திரா வைத்திருந்த அன்புக்கு எடுத்துக்காட்டாக, இப்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதாவது, திருமணத்துக்குப் பிறகு, ஹேமமாலினி கர்ப்பமாகியுள்ளார். பின்னர், பிரவசத்துக்காக மும்பையிலுளள மருத்துவமனை ஒன்றில் ஹேமமாலினி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அந்த மருத்துவமனையின் மொத்த அறைகளையும் தர்மேந்திரா புக் செய்து விட்டாராம். அந்த மருத்துவமனையில் மொத்தம் 100 அறைகள் இருந்துள்ளன. தனது இரு மகள்கள் பிரவசத்தின் போதும் தர்மேந்திரா இவ்வாறு செய்ததாக பேட்டி ஒன்றில் ஹேமமாலினியே தெரிவித்துள்ளார். தனது , மனைவியின் பிரைவேசி கருதியும் ரசிகர்களால் ஏதனும் தொல்லை வந்து விடக் கூடாது என்று கருதியும் தர்மேந்திரா இதைச் செய்ததாக தெரிகிறது.
அதோடு, மகள்களின் வளர்ப்பு விஷயத்திலும் தர்மேந்திரா கடும் கண்டிப்புடன் இருந்ததாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இது பற்றி பேட்டி ஒன்றில் ஹேமமாலினி கூறியதாவது , ''நான் பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தர்தேந்திராதான் எனக்கு ஸ்பெஷலாக தெரிந்தார். அவருடன் நடிக்கும் போது, ஒரு பாதுகாப்புணர்வு இருக்கும். எனது கையை தொடுவதில் இருந்து அனைத்து விஷயங்களிலும் இதைக் காண முடியும். அதேபோல, எங்கள் மகள்கள் இஷா, அஹானா ஆகியோரையும் மிகுந்த பாசத்துடன் அவர் வளர்த்தார்' என்றும் தெரிவித்துள்ளார்.