குட்கா கறைகளால் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தற்போது ஸ்டேடியம் கட்டப்பட்டதும், திறக்கப்பட்டதும் பெரிய விஷயமாக பேசப்படவில்லை. மாறாக, இந்த மைதானத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோதான் பேசு பொருளாகியுள்ளது.
மைதானத்தில் உள்ள சுவரில் குத்கா எச்சில் துப்பியுள்ள காட்சி
மைதானத்தில் உள்ள சுவரில் குத்கா எச்சில் துப்பியுள்ள காட்சி
Published on

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் பீகாரில் உள்ள ராஜ்கிரில் கட்டப்பட்டுள்ளது. 1,121 கோடி செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. தனி கிரிக்கெட் மைதானம் மட்டுமல்லாமல், சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய ராஜ்கிர் விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இங்கு, கிரிக்கெட்டுடன் சேர்த்து 28 உள்ளரங்கு மற்றும் வெளிப்புற மைதானங்கள் அமைந்துள்ளன. இந்த மைதானத்தில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும் . தேவைப்பட்டால், 45 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணும் வகையில், இருக்கைகளை அதிகரித்து கொள்ளமுடியும்.

மைதானத்தில் 3,000 வி.வி.ஐ.பிகளுக்கான சிறப்பு இருக்கை வசதிகளும் உள்ளன. இந்த ஸ்டேடியம் கடந்த 5ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்பட்டது. பீகார் மாநிலத்திலுள்ள இரண்டாவது கிரிக்கெட் ஸ்டேடியம் இதுவாகும். ஆனால், தற்போது ஸ்டேடியம் கட்டப்பட்டதும், திறக்கப்பட்டதும் பெரிய விஷயமாக பேசப்படவில்லை. மாறாக, இந்த மைதானத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோதான் பேசு பொருளாகியுள்ளது.

Cricket Stadium
Cricket Stadium

இந்த மைதானம் திறப்பு விழாவில் ஏராளமான பீகார் மக்கள் கலந்து கொண்டனர். விழா, முடிவடைந்ததும் பார்த்தால் மைதானத்தின் பல சுவர்களில் குட்கா எச்சில் துப்பி வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். சுவரில் குட்கா கறை படிந்து ஆங்காங்கே காணப்பட்டன. இதைk கண்ட இளைஞர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து, 'சர்வதேச மைதானத்தை பீகாரிகள் குட்கா துப்பி திறந்து வைத்தனர்' என்கிற தலைப்பில் வெளியிட, அது வைரலானது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

பலரும் இந்த வீடியோவை பார்த்து விட்டு, கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒருவர், 'துப்பாக்கி, கத்தி போல குட்காவும் ஆயுதம். இது போன்ற இடங்களில் குட்கா மேன்களை அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் , "பெயின்ட் ஒர்க் முழுமையாக முடியாததால், குட்காவால் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது' என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

'பீகாரிகள் தங்கள் வழியில் மைதானத்தை திறந்து வைத்துள்ளனர். இதில், ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 'என்று மற்றொருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

அதே போல , பாட்னாவை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ரோனக் அகர்வால் மற்றொரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரால் திறந்து வைக்கப்பட்ட பாட்னா மெட்ரோ ரயில் நிலையத்திலும் பல இடங்களில் குட்கா கறையை காண முடிகிறது. பாட்னா மெட்ரோ திறக்கப்பட்டு, ஓரிரு நாட்களிலேயே இப்படி மாறியுள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ள அவர், 'இப்படி, இருந்தால் எப்படிப்பா? 'என்றும் குட்கா கூட்டத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னா மெட்ரோ ரயில் நிலையத்தில் குட்கா கறை
பாட்னா மெட்ரோ ரயில் நிலையத்தில் குட்கா கறை

பொதுவாகவே, வட இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு குட்கா சாப்பிடும் பழக்கம் உண்டு. குட்கா சாப்பிட்டு விட்டு கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். பொதுக்கழிப்பறை, ரயில்கள், ரயில் கழிப்பறை, பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் குட்கா கறையைப் பரவலாகக் காண முடியும். ஆனால், இது போன்று புதியதாக கட்டப்பட்ட மைதானங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட குட்காவை துப்பி வைப்பதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்றுதான் தெரியவில்லை.

மக்கள் கூடும் இது போன்ற பொது இடங்களில் குட்கா துப்பி வைத்தால் , எந்த கருணையும் காட்டாமல் ஐந்நூறு, ஆயிரம் என அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான், குட்கா கூட்டம் திருந்தும் என்றும் பல ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.

Puthuyugam
www.puthuyugam.com