"வீடு பெருக்குவது எப்படி?" #Biggboss Day 71

அடுத்து, ஒரு சின்ன இடத்தில் காய்கறி எடுத்து வைத்ததால் ஏற்பட்ட குப்பையை கிளீன் செய்ய சாண்ட்ராவிடமும், பாருவிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார். சாண்ட்ரா முடியாது என்று சொல்லிவிட்டுப் போனதும்,
Housemates in Task
Housemates in Task@jiohotstar
Published on

நேற்று, ’நான் செய்த அட்டகாசங்கள் அனைத்துக்கும், திவ்யா என் மீது காட்டிய வன்மமே காரணம், நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று அமித்தை உட்கார வைத்துக் கொண்டு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த அமித்தும் அதற்கு பலமாக மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

டீ, காபி, முட்டை வந்ததும் பாரு கேமரா முன்னால் வந்து, ’நாங்கள் திருந்தி விட்டோம் பிக்பாஸ். இனிமேல் மைக்கை மறைக்காமல், கழற்றி வைக்காமல் விதிமுறைகளை மதித்து ஒழுங்காக விளையாடுவோம்’ என்று உறுதி சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, உள்ளே வந்து 70 நாட்களுக்கு பிறகுதான் இந்த ஞானம் பிறந்திருக்கிறதாம். சரிதான்!


அடுத்து, ‘வீட்டுத்தல’ போட்டிக்காக படுத்துக்கொண்டே வினோதமான முறையில் பந்துகளை சேகரிக்கும் ஒரு டாஸ்க் நடந்தது. அதில் வினோத் வென்று வீட்டுத்தல ஆனார். இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும், ஒருவர் உதவ வேண்டியிருந்தது. வினோத்துக்கு கமரு உதவியிருந்தார். இதிலும், ’நீ கொஞ்சம் பார்த்து விளையாடியிருந்தால் நான் ஜெயித்திருக்கலாம், போச்சே!’ என்று பாரு, கமருவிடம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். அதாவது, பாரு ஜெயிப்பதற்காக, வினோத்தை கமரு தோற்கடித்திருக்க வேண்டுமாம். இதை முன்னிட்டு இருவருமே, ‘நான் உனக்கு சப்போர்ட் செய்வது போல, நீ எனக்காக செய்ததே இல்லை’ என்பது போல முட்டிக்கொண்டார்கள். இது புருசன், பொண்டாட்டி தகராறு போல, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.

Sandra Amy
Sandra Amy@jiohotstar

அடுத்து வீட்டு வேலைகளுக்கான, குழு பிரிப்பதிலும் பாரு ஒரண்டை இழுத்துக் கொண்டிருந்தார். அவரை கிளீனிங் டீமில் போட்டதற்கு, ‘அந்த மூலையில் கிளீனிங் பண்ண முடியாது. இந்த மூலையை பண்ணமுடியாது. கிச்சன் மேடையை கிளீனிங் செய்யும் அவசியம் எங்களுக்கில்லை. கரிச்சட்டியின் அடிப்பக்கத்தை நான் கிளீனிங் செய்வேன், உள்பக்கத்தை கிச்சன் டீம்தான் பண்ண வேண்டும்’ என்பது போல வீட்டுத்தல வினோத்தின் பிபியை எகிற வைத்துக்கொண்டிருந்தார். வினோத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வழக்கமான அதிரடி டோனை விட்டுவிட்டு அடிமை மோடுக்கு மாறிக்கொண்டிருந்தார். வீட்டுத்தல ஆகிவிட்டாலே, இப்படித்தான்!

அடுத்து மீண்டும் பாரு, கமருக்கிடையே வாக்குவாதம் ஆரம்பித்தது.

’நீ எனக்காக எதிலுமே நிக்கலடா கமரு’

’இப்பக்கூட உனக்காகத்தானே வந்து நின்னுகிட்டிருக்கேன்’

’அன்னிக்கு கோர்ட் டாஸ்க்லயும் அப்படித்தான் பண்ணினே?’

‘எனக்கு வாதாடத் தெரியாதுடி’

’வாதாடத் தெரியலன்னா, பேசியிருக்கலாம்ல’

‘வாதாடாம பேசணுமா? அதெப்படி? இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நாந்தான் சொன்னேன், நீ கேக்கல! நீ என்னைய வக்கீலாவே போட்டிருக்கக்கூடாது’

‘வக்கீலுக்கே இப்படி! சாட்சியா போட்டிருந்தா இன்னும் என்ன நாறடிச்சிருப்பே!’

‘சரி, இப்ப நான் என்னதான் செய்யணும்?’

‘சாண்ட்ரா சொன்னது, சரிதான்’

‘அவ என்ன சொன்னா?’

‘அவன் கேம் ஆடுறான், உனக்காக எதிலும் வந்து நிக்கிறதில்ல. அது உண்மைதான் போலிருக்கு’

‘அப்படின்னா நீ அவளையே லவ் பண்ணிக்கிறியா? என்னை விட்டுடு’

‘என்னடா இப்படிச் சொல்ற?’

Aadhirai,Vj Paaru & Divya Ganesh
Aadhirai,Vj Paaru & Divya Ganesh@jiohotstar

இப்படி ஒரு ஆக்கபூர்வமான விவாதம் நடந்து கொண்டிருந்த இடம் பெட்ரூம். பாரு, பெட்ரூமை பெருக்கிக்கொண்டேதான் இந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.  அவர் துடைப்பத்தை கொண்டு எல்லா திசையிலும், தரைக்கு வலிக்காமல் விசிறிக் கொண்டிருந்தார். வீடு பெருக்குவது எப்படி என்று பாருவைப் பார்த்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வினோத், அவ்வப்போது உள்ளே வந்து, ’துடைப்பத்தை இப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும் பாரு. ஒரு இடத்தில் ஆரம்பித்து இன்னொரு இடத்தை நோக்கிப் போக வேண்டும். இப்படி ஒரே இடத்தில் செக்கு மாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது’ என்று, வீடு பெருக்குவது எப்படி என்று பாடம் நடத்திவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்.

அடுத்து, ஒரு சின்ன இடத்தில் காய்கறி எடுத்து வைத்ததால் ஏற்பட்ட குப்பையை கிளீன் செய்ய சாண்ட்ராவிடமும், பாருவிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார். சாண்ட்ரா முடியாது என்று சொல்லிவிட்டுப் போனதும், ’இதெல்லாம் வாரம் ஒரு தடவைக் கிளீன் செய்தால் போதாதா?’ என்று சொல்லிவிட்டு, அரை மணி நேரம் அவர் கெஞ்சிய பின்னர், பாரு சம்மதித்தார். அதன் பிறகும், ‘ஐய்யோ, இப்படி வேலை வாங்கி, கொடுமைப்படுத்துகிறார்களே’ என்று அழுதபடியேதான் போனார்.

அடுத்து, ஓபன் நாமினேஷன் தொடங்கியது. விக்ரமைத் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டார்கள். இறுதிக்கட்டத்தில் பாருவின் வன்மத்தோடு, ஒரு ஓட்டு கூட வாங்காமலிருந்த கனியையும், அரோராவையும் நாமினேட் செய்ததால், பாருவின் ஒரு ஓட்டை வைத்துக்கொண்டு அரோராவையும், கனியையும் உள்ளே தள்ளிவிட்டார் பிக்பாஸ்! அதே, போனவாரம் ஒரு ஓட்டு வாங்கிய பாருவை விட்டுவிட்டார்! இந்த பிக்பாஸுக்கு ஆரம்பத்திலிருந்தே கனி மீது ஏதோ காண்டு இருப்பது போலவே தோன்றுகிறது.

Puthuyugam
www.puthuyugam.com