பிக்பாஸ் வீடு கொதித்தது! பாரு–கமரு அலப்பறை #Biggboss Day 68

அதோடு இங்கிருக்கும் எல்லாருமே மைக்கை மறைத்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பலிகடாவாக்கி, உங்களுக்கு பாடம் நடத்துவதற்காக பிக்பாஸ் இதை பெரிதாக்கியிருக்கலாம்.
Court Task
Court Task @jiohotstar
Published on

வழக்காடு மன்றம் டாஸ்க்கின் கடைசி வழக்காக, பாரு மற்றும் கமரு மீது, திவ்யா, சுபி, ரம்யா, சாண்ட்ரா ஆகிய நால்வரும் கொடுத்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது, பாரு மற்றும் கமரு மைக்கை மூடிக்கொண்டு பேசி செய்த தவறினால், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் டீ, காபி, முட்டை இல்லாமல் இல்லாமல் கஷ்டப்படுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது வழக்கு! பாருவுக்கு எதிரான வழக்கு என்றாலே, அதை மிக எளிதாக உழப்பிவிட்டு நசநசக்க வைத்துவிடுவார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். அவர்களுக்கு ஆதரவாக வாதாட அமித்தை வக்கீலாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடவே, அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதற்காக இந்த வீட்டில் அந்த இருவரையும் மதித்து, கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரே நபரான வினோத்தையே ஜட்ஜாகவும் ஆக்கி இருந்தார்கள். சாண்ட்ரா, பாருவுக்கு எதிராக வழக்கில் இறங்கியதிலும், இந்த வாரம் முழுதும் ஒன்றும் செய்யவில்லை என்று மொத்திவிடுவார்களோ எனும் பயம்தான் காரணம்!

அமித் முதல் வாதமாக சுபியிடம், ’இதே வீட்டில், வெறும் உப்புக் கஞ்சி குடித்துக் கொண்டு கூட சந்தோசமாக நாம் இருந்திருக்கிறோம் இல்லையா, அப்படியிருக்க, ஒரு சில நாட்களுக்கு டீ, காபி இல்லாமல் இருக்க முடியாதா? இதை ஏன் இவ்வளவு பெரிதாக்குகிறீர்கள்?’ என்று கேட்டார். கேள்விகளைக் கூட பாரு எழுதிக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது.

அதற்கு சுபி, ’அது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! பிக்பாஸ் டாஸ்க்குக்காக உப்பு கஞ்சி மட்டுமல்ல, பட்டினியே இருக்கச் சொன்னாலும் இருக்கலாம். ஆனால், ஒரு சக போட்டியாளர் செய்த தவறுக்காக எல்லோரும் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்?’ என்று சரியாக பதிலடி கொடுத்தார்.

பாரு வந்து பேசும்போது, ’பணம், பிராப்பர்டி போன்ற பர்சனல் விஷயங்களைப் பற்றிப் பேசும் போதுதான், அப்படி மைக்கை மறைக்க வேண்டியது வந்தது. மற்றபடி எதுவும் இல்லை’ என்று இல்லாத புளுகுணித்தனத்தை அவிழ்த்துவிட்டார். அதற்கும், ‘அப்படியான பர்சனல் விசயங்களை இங்கே பேச வேண்டிய அவசியமென்ன? இங்கே எல்லாவற்றுக்கும் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டுவிட்டுதானே வந்திருக்கிறோம்’ என்று சொன்னதற்கும், எதையெதையோ சொல்லிச் சமாளித்தார். பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த போதும் சும்மா இருக்காமல், கமருவோடு, கசகசவென பேசிக்கொண்டே இருந்தார். இதனால் பக்கத்திலிருந்த விக்ரம், எஃப்ஜே ஆகியோரோடு வளவளவென்று வம்பிழுத்துக்கொண்டே இருந்ததை சகிக்கமுடியவில்லை.

Aurora Sinclair
Aurora Sinclair@jiohotstar

எல்லாவற்றையும் மீறி, பாருவுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு, எல்லோரும் வழக்காடு மன்றத்தை விட்டு வெளியே போன பிறகும் கடைசி ஆளாக பாருவும், கமருவும் விளக்குகள் அணைக்கப்பட்ட அந்த அறைக்குள் இருந்து வெளியே வராமல், ஒரு சில நிமிடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்களோ தெரியவில்லை. மைக்கில் பேச்சுச் சத்தமும் கேட்கவில்லை. பிக்பாஸ்தான் வேறு வழி இல்லாமல் என்று ’பாரு, கமருதீன்’ என்று சப்தமிட்ட பிறகுதான் இருவரும் வெட்கப்பட்டுக்கொண்டே வெளியே வந்தார்கள்.

அதன் பிறகு கமருதீன், எஃப்ஜேவுடன் கோர்ட்டுக்குள் ஆரம்பித்த பிரச்சனையை தொடர்ந்து பேசுவோம் என்று ஆரம்பித்து, அது பெரிய சண்டையாகிப் போனது. மாற்றி மாற்றிப் பேசி, கேட்பவர்களுக்குப் பைத்தியம் பிடிக்க வைப்பதில் இந்த பாருவையும், கமருவையும் அடித்துக்கொள்ள முடியாது. இன்றைக்கும் தேவையில்லாமல் கமரு, திவ்யாவைக் கேலி செய்யவும், அவர் வந்து கேட்டதற்கு சரியாகப் பதில் சொல்லாமல் அவரைக் கடுப்பேற்றி, மாக்கிங் செய்து அழவிட்ட சம்பவமும் நடந்தது. யாருக்குமே இந்த இருவரையும் சரியாகக் கையாளத் தெரியவில்லை. அதை இந்த வீட்டுக்குள் ஓரளவுக்கு செய்வது எஃப்ஜே மட்டுமே!

’நாங்க மட்டுமா மைக்கை மறைத்துப் பேசுகிறோம்? நீ கூடத்தான் மைக்கை மறைத்துப் பேசியிருக்கிறாய். உன்னையும்தான் பிக்பாஸ் மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார். பிறகு என்னடா, எங்களை மட்டுமே எல்லோரும் குற்றம் சொல்லிட்டு இருக்கீங்க?’

’எனக்கு மட்டுமில்லை, இங்கு எல்லாருக்குமே மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று பிக்பாஸ் சொல்லி இருக்கிறார். அதெல்லாம் தெரியாமல், நம்மை அறியாமல் மைக் நழுவும்போது சொல்லப்பட்டதுதான். ஆனால், உங்களைப் போல யாரும் மைக்கை மறைத்துப் பிடித்துக் கொண்டு பேசுவதோ, கழற்றி வைத்துவிட்டுப் பேசியதோ கிடையாது. உங்களுக்குதான் ஒரு தடவை, ரெண்டு தடவை இல்லை பல தடவைகள் மைக்கை ஒழுங்காகப் போடவும் என்று பல தடவைகள் பிக்பாஸ் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். அதோடு, அது அளவு மீறிப் போனதால்தான் இப்போது இந்த தண்டனையை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்களோடு மற்றவர்களை ஒப்பிட்டுப் பேசாதே!’

Daily Task
Daily Task@jiohotstar

’எங்களுக்கும் மைக்கை சரியாக போடுங்கள் என்றுதான் அவர் சொல்லியிருக்கிறாரே தவிர, மைக்கை  மறைத்துக் கொண்டு பேசாதீர்கள் என்று பிக்பாஸ் சொன்னதே கிடையாது’

மைக்கை மறைத்துக்கொண்டு பேசாதீர்கள் என்றும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார். பாருவோடு சேர்ந்து இந்தக் கமருவுக்கும் புளுகுணி வியாதி தொற்றிக்கொண்டுவிட்டது. அதோடு, என்ன சொல்ல வருகிறார்? மைக்கை மறைத்துக்கொண்டு பேசாதீர்கள் என்று பிக்பாஸ் சொல்லவில்லை என்பதால், நாங்கள் இதுவரை அப்படிச் செய்ததில்லை என்கிறாரா? அல்லது, எல்லோரும் அப்படிச் செய்யலாம் என்கிறாரா?

’அதோடு இங்கிருக்கும் எல்லாருமே மைக்கை மறைத்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பலிகடாவாக்கி, உங்களுக்கு பாடம் நடத்துவதற்காக பிக்பாஸ் இதை பெரிதாக்கியிருக்கலாம், அல்லவா?’

என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். அடப்பாவிகளா! கமரு, இப்போது இப்படிப் பேசுவதற்கு நாளை விஜய் சேதுபதி வந்து ஆதரவு கொடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வாக்குவாதத்தின் போது பாரு, கமருவை நெருங்கி வந்து, ‘சரி நிறுத்து’ என்பது போல கையைப் பிடித்ததும், கமரு அமைதியானார். அதற்கு எஃப்ஜே, ‘ஆகா, சிக்னல் வந்துடுச்சா, இனிமே அப்படியே பொட்டிப்பாம்பா அவ பின்னாடியே போயிடுவான்’ என்று கமெண்ட் அடிக்கவும் மீண்டும் சண்டை தொடங்கியது! அப்போதும், பாரு, எஃப்ஜே சொன்ன ஏதோ ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, ‘என் ஃபேமிலியைப் பற்றிப் பேசாதே’ என்று ஒரு புதிய குற்றச்சாட்டைத் தூக்கிக்கொண்டு வந்தார். அதையும் எஃப்ஜே லெஃப்டில் டீல் செய்து அனுப்பிவிட, கெட்டவார்த்தையை முணுமுணுத்துக்கொண்டு வெளியே போய், ‘என்னால் என் வார்த்தையை, கோபத்தை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை பிக்பாஸ்’ என்று மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டே இருந்தார் பாரு. அப்படி கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்கு உள்ளே இருக்க வேண்டும் என்பது நமது கேள்வி!

அடுத்து ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் தேர்வு நடந்தது. இந்த வாரம் முழுவதும் ஒன்றும் செய்யாமல் மூலை மூலையாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்த சான்ட்ராவை மறந்துவிட்டு, பெரும்பாலும் ரம்யாவைச் சொன்னார்கள். ரம்யா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Puthuyugam
www.puthuyugam.com