அரங்கேறிய மூன்று நாடகங்கள்! #Biggboss Day 58

புருஷர் பிரஜினுக்கு கேட்க வேண்டும்னுதான் அவர் கத்திக் கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரிகிறது. திவ்யாவுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை போலிருக்கிறது, அதனால் அவருக்குத் தெரியவில்லை!
Gana Vinoth and Aurora Sinclair
Gana Vinoth and Aurora Sinclair@jiohotstar
Published on

கமருவும், பாருவும் அரோராவைப் பிடித்து உட்கார வைத்துக் கொண்டு, இந்த முக்கோணக் காதல் கதையை இப்படியே கொண்டுபோகலாமா, அல்லது சதுரமாகவோ, வட்டமாகவோ மாற்ற வேண்டுமா என்று தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். உண்மையில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமே அல்ல, எதைப் பேசி என்ன முடிவு எடுத்தாலும் அதைப் பாருவோ, கமருவோ கவனத்தில் கொள்ளப் போவதில்லை. ஏதோ அரோராவிடம்தான் தப்பு இருப்பது போல போலவும், அவரைப் பேசிச் சரி செய்து விடலாம் என்பது போலவும் இரண்டு பேரும் ஆரம்பித்தனர்.

அரோரா, ’பாரு, இவன் உன்னை லவ் பண்றான். நீயும் அவனை லவ் பண்ற. எனக்கு அவன் மேல ஒரு உண்மையான அன்பு இருக்கு, ஆனா அது லவ்வெல்லாம் இல்லை. ஆனா, நீ அவனை எப்பெல்லாம் அசிங்கப்படுத்தி அனுப்பி வைக்கிறியோ, அந்த கேப்ல மட்டும் என்கிட்ட வந்து பழகுறான். அது என்னோட உணர்வை கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. அது எனக்கு வேண்டாம்’

என்று அவரது கருத்தை தெளிவாக எடுத்துச் சொன்னார். அனேகமாக பாய் பெஸ்டி மாதிரியான ஒரு உணர்வு கமருவின் மீது அரோராவுக்கு இருக்கிறது போலத் தெரிகிறது. ஆனால் அவர் சொன்னதை இரண்டு பேரும் கேட்கவில்லை. ’நான் உன்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு கமரு ஒரு பக்கம் முறுக்கிக் கொள்ள, ’இந்த லூசு இப்படித்தான் என்று தெரியும். என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை, அதனால்தான் எதுவும் பேச வேண்டாம் என்றிருந்தேன். அதையும் மீறி கூப்பிட்டுப் பேசிவிட்டு இப்போது இப்படிப் போகிறான்’ என்று அரோராவும் அழுது கொண்டே எழுந்து போனார். ஒரு மத்தியஸ்தர் ஃபீலிங்க்ஸோடு அவர் பின்னாடியே போய், ’நீங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துக் கொள்ளுங்க அரோரா, இப்ப எல்லாம் சரியாத்தானே போகுது, ஏன் அழற? இப்படியே போகட்டுமே, அதில் என்ன பிரச்சனை?’

என்பது போல அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார் பாரு. எல்லாம் சரியாத்தானே போகுது அதில் என்ன பிரச்சனை, என்பது பாருவுக்குத் தெரிந்திருந்தால் இந்த விவாதமே தேவையில்லையே! ஆனால், அது அரோரா, கமரு மீது வைத்திருந்தது காதலே அல்ல என்று அவர் வாயாலேயே சொன்ன பிறகுதான் பாருவுக்கு புரிந்திருக்கிறது.

Vikkals Vikaram
Vikkals Vikaram@jiohotstar

இதில் மூட் அவுட் ஆகி வெளியே உட்கார்ந்திருந்த அரோராவை, 'உன் கதையை விடு, கொஞ்சம் என் கதையைப் பேசுவோம்' என்று ஆதிரை பிடித்துக் கொண்டார். ‘இன்னைக்கு நாமினேஷன் பண்ணோமில்ல, அதுல நான் என்ன ரீசன் சொல்லி இருப்பேன்னு நீ நினைக்கிற?’ என்று கேட்டதற்கு, நீ என்ன ரீசன் சொல்லியிருந்தா எனக்கென்ன என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார் அரோரா. அதற்கு ஆதிரையே பதிலும் சொன்னார்,

’இங்க இருக்கிற ஆண்கள், பெண்களைப் பயன்படுத்தி, விக்டிம் கார்ட் யூஸ் பண்ணி ஒரு அக்ளி கேம் விளையாடுறாங்க என்று சொல்லி நாமினேட் செய்தேன்’.

அதாவது இப்போது அரோரா, கமருவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போலவே, முன்னால், நான் எஃப்ஜேவால் பாதிக்கப்பட்டேன் என்று அரோராவுக்கு விளக்குகிறாராம், அதாவது கூட்டு சேர்த்துக் கொள்கிறாராம்! மேலும்,

‘உனக்கு தெரியுமில்ல அரோரா, என்னைக்காவது அவனை லவ் பண்றேன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேனா? ஆனா வெளியில எல்லாருக்கும் அப்படித்தான் போர்ட்ரெய்ட் ஆகியிருக்கிறது. எல்லாம் எஃப்ஜே பண்ணின வேலை! என்ன அநியாயம் பார்த்தியா? இப்ப அதே வேலையை அவன் வியானாவிடம் பண்ணிக் கொண்டிருக்கிறான்’

என்னடா லாஜிக் இது? ஆதிரை எஃப்ஜேவை லவ் பண்ணியிருந்தால் கூட அதை அரோராவிடம் வந்து ஏன் சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்லியிருந்தால் மட்டும்தான் அது வழக்குக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா என்ன? இதையெல்லாம் இப்போது எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்பது போலவே அவரைப் பார்த்துவிட்டு,

‘ஆதிரையுடன் பழகியது போலவேதான் நான் வியானாவிடமும் பழகுகிறேன். ஆதிரை அதை வேறு இடத்துக்கு கொண்டு போய்விட்டாள். வியானா அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குள் நட்பு மட்டும்தான் இருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று எஃப்ஜே என்னிடம் சொல்லிவிட்டான், அவன் தெளிவாத்தான் இருக்கான்’

என்று பதில் சொன்னார். அதாவது நீயாக ஏதும் கற்பனை செய்து கொண்டு இப்படிப் புலம்பிக் கொண்டு திரியாதே, அதில் பயனில்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். அப்படியே, எஃப்ஜே, ஆதிரைக்கு தவறு செய்திருக்கிறார் என்று அவருக்குத் தோன்றினால், எஃப்ஜேவிடம்தான் போய் மல்லுக்கு நிற்க வேண்டும்! அவர் மல்லுக்கு நின்ற லட்சணத்தைத்தான் நாம் நேற்றே பார்த்தோமே!

Prajin in Police getup
Prajin in Police getup@jiohotstar

பாரு, கொஞ்சம் கூட திருந்த வாய்ப்பில்லை என்பதை நிரூபிக்கும்படி அடுத்து ஒரு சம்பவம் நடந்தது. அரோரா இந்த முக்கோணத்தில் இருந்து விலகி விட்டார், நம் காதலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற சந்தோஷம் பாருவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பாருவும், கமருவும் சாப்பிடுகிற இடத்தில் உட்கார்ந்து குசுகுசுவென்று அரோராவைப் பற்றி சாடை பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘நீ அவன லவ் பண்ணலல்ல. இன்னொருத்தி அவனை லவ் பண்றான்னு தெரியுதில்ல. நீ இப்ப இவ்வளவு அறிவோட பேசுறல்ல, அப்படின்னா நீ அவனோட பழகுறது அவளுக்கு பொசசிவ் ஆகும்னு உனக்கு தெரியும்ல, அப்படின்னா நீயே விலகிப்போயிருக்க வேண்டியதுதானே’ - இது பாரு.

‘நீ என்கிட்ட பழகுற விதம், எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கக் கூடிய விதம், எக்ஸ்ட்ரா அட்டென்ஷன் கொடுக்கக் கூடிய விதம், இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாரு. அதனால வெளியில போய் நாம் பழகலாம் என்றுதான் நான் உன்னிடம் வந்தேன். ஆனால், அவளிடம் எனக்கு இது மாதிரி எந்த உணர்வும் எனக்குக் கிடையாது பாரு’

பாருவிடம் வெட்கச்சிரிப்பு.

‘துஷாரிடமும் அப்படிப் பழகிவிட்டு அவன் போனதும், இப்ப உன்னிடம் வந்து இப்படிப் பழகுவது என்ன மாதிரியான விஷயம்டா? அப்ப, யாருக்குதான் நீ உண்மையா இருக்கிற?’

’ஆமா பாரு, துஷார் இப்ப என்ன நெனச்சிட்டு இருப்பானான்னு கூட எனக்கு தெரியாது. அவனை மிஸ் பண்றேன்னு என்கிட்டயே வந்து சொல்றா’

’பாரேன், அவ்வளவு பெரிய அநியாயம்! அவ உன்ன யூஸ் பண்ணிக்கிறாடா, எப்படியாச்சும் அவக்கிட்டயிருந்து வெளிய வந்துடுடா’

அடுத்து, சான்ட்ரா கடும் கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு தனியாக  வெளியே போய் உட்கார்ந்திருந்தார். நாம் ஏதோ புருஷன் பொண்டாட்டி பிரச்சினை போலிருக்கிறது, குறிப்பாக நேற்று ’நான் இண்டிவிஜுவல் கண்டஸ்டண்ட், அதனால், சான்ட்ராவுடன் உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்’ என்று விஜய் சேதுபதி முன்னால் பிரஜின் சொன்னதால் ஏற்பட்ட கடுப்பில் இருக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதே நினைப்பில், ‘அய்யய்யோ நம் ஆருயிர்த்தோழிக்கு ஏதோ பிரச்சனை போலிருக்கிறதே, உடனே போய் விசாரிப்போம்’ என்று ஆர்வமாக ஓடி வந்தார் திவ்யா. ஆனால், அப்படி வந்தவரை காண்டான காண்டாமிருகம் மாதிரி விழுந்து பிறாண்டி வைத்தார் சான்ட்ரா.

’என்ன பிரச்னை சான்ட்ரா?’

’யாருக்கு இங்கு என்ன பிரச்சனை? ஏன் எல்லாரும் எனக்கு பிரச்னை பிரச்னைனு சொல்லிட்டு இருக்கீங்க? எனக்கு எந்த பிரச்னையும் இல்லை’

’சரி, அப்ப ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?’

’எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கும். என் பிரச்னை யாருக்கும் தேவையில்லை. நானே இது எங்க அப்பா இறந்த மாசம்ன்னு சோகத்துல இருக்கேன். அது உங்களுக்கு எல்லாம் காமெடியா இருக்கிறதா?’

’யாருக்கு காமெடியா இருந்தது?’

’அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் இப்ப சோகமா இருக்கேன்’

’இது பத்தி என்கிட்ட நீ சொல்லவே இல்லையே’

’எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கும், எல்லாத்தியும் எல்லோருகிட்டயும் சொல்லிகிட்டு இருக்கணும்னு எனக்குத் தேவையில்ல. நான் எங்க அப்பா இறந்ததைப் பத்தியும் யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. புரியுதா?’

’ஒண்ணும் புரியல, அதுக்கு ஏன் இப்படி என்கிட்ட நீ கத்திகிட்டு இருக்க இப்ப?’

Viyana
Viyana@jiohotstar
Gana Vinoth and Aurora Sinclair
எவிக்‌ஷனில்லாத வாரம்! #Biggboss Day 56

புருசர் பிரஜினுக்கு கேட்க வேண்டும்னுதான் அவர் கத்திக் கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரிகிறது. திவ்யாவுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை போலிருக்கிறது, அதனால் அவருக்குத் தெரியவில்லை. 

’நான் கத்திகிட்டு இருக்கனா? எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கும். அப்படியெல்லாம் நான் கத்தக் கூடாதா? எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டுதான் கத்தணுமா?’

’இல்லப்பா, என்ன பிரச்னைனு தெரிஞ்சாத்தானே பேச முடியும்?’

’அதான் கூட ஒருத்தர் இருக்கார் இல்ல, என்கிட்ட பேசறதுக்கு முன்னால அவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணுமில்ல. புரியுதா?’

’இது என்னடி கூத்தா இருக்கு? நீ சோகமா இருக்கியே, என்ன பிரச்னைனு கேட்டு சிரிக்க வைக்கலாம்னு நினைச்சு வந்தது ஒரு தப்பா?’

’சிரிக்க வைங்க, ஆனா ஊரே சிரிக்கிற மாதிரி வச்சிராதீங்க!’

’இப்ப யாரு என்ன பண்ணுனாங்கன்னு இப்படி கொந்தளிச்சிட்டு இருக்குற? குறிப்பா நான் என்ன பண்னேன் உனக்கு? சமாதானப்படுத்த வந்தது ஒரு குத்தமா?’

வடிவேலுவின் ’கையைப்புடிச்சி இழுத்தியா’ ரேஞ்சுக்குப் பேசி, திவ்யாவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. அடுத்து வீட்டுக்குள் அனைவரையும் உட்கார வைத்துக் கொண்டு, பிரஜின் மூன்றாம்பிறை இறுதிக் காட்சியை நடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். அவரது விஜியான, சான்ட்ரா வெளியே தனியாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கேமராவும் சரியான கோணத்தில் காண்பித்துக்கொண்டிருந்தது. பிரஜினின் இந்த சீன் கிரியேஷனுக்கு பொருத்தமாக இருப்பது போலவே சான்ட்ரா கோபத்தில் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்ததை பார்க்கும்போது, புருசனும், பொண்டாட்டியும் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டுதான் இதைச் செய்தார்களோ என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.

சற்று நேரம் கழித்தும் பெட்ரூமில் சான்ட்ரா அதே கோப, சோக மூடில்தான் உட்கார்ந்திருந்தார். ’இவரை ஏதாவது விசாரிக்கலாமா, விழுந்து பிறாண்டி வைத்துவிடுவாரோ, பக்கத்தில் போவதற்கே பயமாக இருக்கிறதே’ என்று விக்ரமும், அரோராவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து வீட்டை இரண்டாகப் பிரித்து, ஆளுக்கொரு வேசத்தையும் கொடுத்து, குழுவுக்கொரு நெக்லஸையும் கொடுத்து, இந்த வார வீக்லி டாஸ்க்கையும் ஆரம்பித்து வைத்தார் பிக்பாஸ். நெக்லஸை பாதுகாக்கும் டீமுக்கு தல டாஸ்க்கில் பங்கு! நெக்லஸைத் தொலைக்கும் டீமுக்கு நேரடி எவிக்‌ஷன்! எனில் அடுத்த வாரம் வழக்கமான பெஸ்ட், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் தேர்வு, நாமினேஷன் தொந்தரவு இதெல்லாம் இருக்காது போலிருக்கிறது. பார்க்கலாம்!

Puthuyugam
www.puthuyugam.com