சபரி மீது வன்மத்தைக் கக்கிய பிரஜின்! #Biggboss Day 39

மன்னர் டாஸ்க்கில், சிறப்பாக விளையாடியவர் யார் என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பூசணிக்கும், பாருவுக்கு தங்களைச் சொல்ல ஆசை இருந்தாலும், வேறு வழியின்றி பொது ஆளான சுபியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
Amit , Kani and Vikkals Vikram
Amit , Kani and Vikkals Vikram@Jiohotstar
Published on

பூசணி வழக்கம் போல, தனக்கு மன்னர் பதவி கிடைத்ததில் எஃப்ஜே, கனி உள்ளிட்ட அனைவருக்கும் பொறாமை என்று பொரிந்து கொண்டிருந்தார். பாரு உள்ளே வந்து ’அப்படியெல்லாம் இல்லைண்ணே’ என்று நியாயம் பேச முயன்றபோது கூட, தனது ஒரே வெல்விஷர் என்று கூட பாராமல், ‘நீ சும்மா கிட பாரு, உனக்கும்தான் பொறாமை’ என்று பாரு வாயிலேயேயும் மண்ணள்ளிப்போட்டார். மொரட்டுத்தனமாக சகட்டுமேனிக்கு கம்பு சுற்றுவதில் இந்தாளை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

‘ஒரு ஆளை பகைச்சுக்கிட்டா, ஒம்போது பேரின் ஆதரவை இழந்து பதவி போயிடும்னு சொன்ன பார்த்தியா பாரு, உனக்குன்னா ஒரு நாயம், எனக்குன்னா ஒரு நாயமா பாரு?’

‘உன்னைய ஒரு வார்த்தை சொல்லிட்டா போதுமே, என்ன ஏதுன்னு காது கொடுத்துக் கேட்காம சகட்டு மேனிக்கு பேச ஆரம்பிச்சிடுவியே. நீ பண்றது எல்லாமே கரெக்டுனு நினைச்சிகிட்டு இருக்கியா?’

‘நீ மட்டும் எல்லாத்தையும் கரெக்டா பண்ணிக் கிழிச்சிகிட்டு இருக்கியா? இந்தப் படம்லாம் ரொம்ப நாளைக்கு ஓடாது பாரு. நான் சொல்ற ஒவ்வொரு பாயிண்டையும் காப்பியடிச்சி நீயா சொல்ற மாதிரி சொல்லி ஆடிகிட்டிருக்கே’

‘காப்பியடிச்சனா? எல்லாமே நாந்தான், நாந்தான்… நெஞ்சில அடிச்சிகிட்டு பொலம்புற பாத்தியா உன்னை வைச்சிகிட்டு நான் படுற பாடு இருக்கே, சரிய்யா நீதான்யா எல்லாம்னு வைச்சுக்கோ!’ என்று இரண்டு கண்டெண்ட் பைத்தியங்களும் அடித்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த எல்லோரும் இவர்களைக் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலைகளை சின்சியராக பார்த்துக்கொண்டிருந்தனர்.

அடுத்து டாஸ்க் ஆரம்பித்தது. வினோத், பூசணியை விதம்விதமாகக் கலாய்த்துக் கொண்டிருந்தார். இந்தாளும் இதை நிறுத்துவது போல் தெரியவில்லை. அனைவரும் சிரித்துக்கொண்டிருக்க, பூசணி மட்டும் கடுகடுவென பார்த்துக்கொண்டிருந்தார். நேற்றைக்கு ஆரம்பித்த அரோரா, பூசணி பிரச்சினையில் பாரு, இருவருக்கும் சிறை தண்டனை கொடுத்தார். அதாவது, நேற்று ’அரோராவிடம், பூசணி மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்று சொல்லப்பட்ட தீர்ப்பு, அவரது அடிமை நேற்று போல் கோவித்துக்கொண்டு போய்விடக்கூடாது என்பதால், இன்றைக்கு இந்த புதிய தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது குற்றவாளிக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை. அடாடா, அற்புதம்!

Prajin and Divya Ganesh
Prajin and Divya Ganesh@jiohotstar

இந்த அநீதியால், நாங்கள் இங்கு இருக்க மாட்டோம் என்று அரோராவும், சாண்ட்ராவும் எதிரி ராஜ்ஜியத்துக்குப் போகிறோம் என்று கிளம்பினார்கள். அவர்களை தடுக்கிறேன் பேர்வழி என்று ஈஈ என்று இளித்தபடி சாண்ட்ராவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார் பூசணி. இந்தாள் ஒரு மொரட்டு, முட்டாப்பீசு மட்டுமல்ல, விவகாரமான பீசு என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அரோரா, வியானா போன்ற இளம்பெண்கள் மட்டுமின்றி, அண்ணே என்று சொல்லியபடி கூடவே இருக்கும் பாருவை இப்போது வந்திருக்கும் திவ்யாவை, கணவரோடு வந்திருக்கும் சாண்ட்ராவையும் கூட இந்த ஆள் பேசற பேச்சும், பார்வையும், செய்கிற காரியங்களும் கொஞ்சமும் சரியில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பிளையிங் கிஸ் எல்லாம் கொடுக்கிறார். திவ்யாவுக்கு கைகொடுக்கிறேன் பேர்வழி என்று கை வலிக்கும் படி அழுத்தி விட்டிருக்கிறார். இப்படி ஒரு கேவலமான ஆளை பிக்பாஸ் வரலாற்றில் நாம் பார்த்ததில்லை! இவரை எல்லாம் செவுளில் இரண்டு போட்டு வெளியே பத்திவிடவேண்டும். ஆனால், இன்னும் உள்ளே வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து ஒரு டீம் கோட்டை கட்ட, இன்னொரு டீம் அதைக் குலைக்க வேண்டும் என்று ஒரு டாஸ்க்! இதுவும் வழக்கமான ஆட்டம்தான். இதிலும் பாருவின் அட்டகாசங்கள் இருந்தன. ஒரு அழுகுணி ஆட்டம் ஆடி முடித்தார்கள்.

மூன்று டாஸ்க்குகளில் இரண்டில் ஜெயித்ததால், தர்பீஸ் ஆட்சி வென்றது என்று அறிவித்து மொத்தமாக மன்னர் டாஸ்க்கை முடித்தார்கள். அப்பாடி!

மன்னர் டாஸ்க்கில், சிறப்பாக விளையாடியவர் யார் என்று தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பூசணிக்கும், பாருவுக்கு தங்களைச் சொல்ல ஆசை இருந்தாலும், மற்றவர்கள் இவர்கள் வாயிலேயே குத்தும் ஆபத்திருந்ததால் வேறு வழியின்றி பொது ஆளான சுபியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அடுத்து ஆபத்தான ரேங்கிங் டாஸ்க் வந்தது. ஒவ்வொரு சீசனிலும், கடும் குழப்பத்துக்கும், வாக்குவாதத்துக்கும் உள்ளாகி முடியாமல் இழுத்துக்கொண்டே போவது இந்த டாஸ்க்! ஆனால், எந்த மூவர் சிறப்பாகவும், நியாயமாகவும் முடிவெடுக்கக்கூடியவர்கள் என்று எல்லோரையும் சொல்ல வைத்து, முதலில் மூன்று பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ்! கனி, அமித், விக்ரம் தேர்வானார்கள். அவர்கள் ஆயுதத்தை வைத்து அவர்களையே போடுவது போல, அவர்கள் 3 பேரையும் வைத்து மற்ற 14 பேரையும் வரிசைப்படுத்தச் சொன்னார். காரியம் ஏறத்தாழ கச்சிதமாக முடிந்தது. சற்று முன்பின் இருந்தாலும் ஓரளவு சரியாகவே வரிசைப்படுத்தினார்கள். ஆனால் கடைசி இரண்டு இடங்களிலிருந்த பூசணி, பாரு கொதித்ததைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. 6வது இடம் தரப்பட்ட வியானாவெல்லாம், இவருக்கு 6வதே அதிகம் என்று நிரூபிப்பது போல, முதல் 3 இடம் தரப்பட்டவர்கள் எனக்கு ஈடானவர்கள் இல்லை, இது அநியாயமான ரேங்கிங் என்றார். ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விதமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த டாஸ்க்குக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்ததே இவர்கள்தான் என்பது இவர்களுக்கு மறந்துபோனது! எல்லாவற்றையும் விட இது இந்த தனிப்பட்ட மூவரின் கருத்துதான், மக்களின் முடிவல்ல எனும் எளிய புரிதல் கூட ஒருவருக்குமில்லை!

Vikram and his Kingdom
Vikram and his Kingdom@jiohotstar

ஓரளவு மெச்சூர்டாக இருப்பார்கள் என்று நாம் நினைத்த வைல்டு கார்டு எண்ட்ரிகள் பிரஜின், திவ்யாவும் கூட தங்களுக்குத் தரப்பட்ட நடுவான ரேங்க்குகளுக்குக் கொதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருபடி மேலே போய், பிரஜின் நடுவர்களை விரோதமாக டிரீட் செய்ததோடு அல்லாமல், ‘ஒரு பெண் என்றும் பாராமல், பாருவை வேண்டுமென்றே ரிவஞ்ச் வைத்து கண்ணில் தாக்கிய சபரிக்கு முதலிடமா?’ என்று கேட்டதெல்லாம் அநியாயம்! இது வீண்பழி!

கடைசி இடம் பிடித்த பூசணி, பாரு, எஃப்ஜே மூவரையும் ஜெயிலில் பிடித்துப் போட்டார்கள். பாரு கதறியபடி உள்ளே போனார்.

Puthuyugam
www.puthuyugam.com