பந்தா பாருவின் பஞ்சாயத்து #BiggBoss9 Day 3

‘சரி அப்ப வா, வீடு பெருக்கு’ என்று சுபி சொன்னதும், மீண்டும் ‘முடியாது’ என்று பல்டியடித்து சுபியின் மண்டையை மெண்டலாக்கிவிட்டார். பாரு வீடு பெருக்குவாரா மாட்டாரா’.
Housemates on Morning Task
Housemates on Morning Task@Jiohotstar
Published on

கடமை வீரன் ஸ்பீக்கர் சபரி தண்ணி எப்ப வரும்னு தெரியாம, ஓவர் பொறுப்பாகி விடியவிடிய தண்ணி டேங்க் பக்கத்துல தூங்காம உக்காந்துகிட்டு இருந்திருக்கார், அந்த அளவுக்குப் போறதுக்கெல்லாம் இன்னும் காலம் கிடக்குதுன்னு தெரியாம! 

ஏன் இப்படி விளையாடுறாங்க என்பது ஓர் ஆச்சரியமான விசயம்தான். இரவு தண்ணி அனுப்ப வாய்ப்பு குறைவு, அப்படியே அனுப்பி, நாம பிடிக்காட்டியும் கூட என்ன ஆகப்போகுது? தண்டனைங்கிற பேர்ல டீலக்ஸ் ரூமுக்குப் போ, டீக்கு சக்கரை கிடையாதுனு ஏதாச்சும் சொல்லுவானுக. அதுக்கப்புறமாக்கூட இரவு கண்ணு விழிச்சிக்கலாம். பிக்பாஸே கேனத்தனமா ஒரு டாஸ்க் வைச்சாக்கூட அதை பன்மடங்கு கேனத்தனமா அதிகப்படுத்திக்கிறதே இவனுகளோட ஓவர் சிந்தனைதான்னு தோணுது. கனி வந்து ஸ்பீக்கரிடம் கனிவாகப் பேசினார்.

அடுத்து போட்டுக்கொடுக்கும் டாஸ்க் ஒண்ணு! எவன் இந்த வாரமே வெளியப்போவான்? எவன் கப்பு ஜெயிப்பான்னு மூஞ்சிக்கு நேரா சொல்லணுமாம்!

Vikram pointing out on Pravin Gandhi
Vikram pointing out on Pravin Gandhi@jiohotstar

விக்கல் விக்ரம்கிட்ட நாம எதிர்பார்த்த மாதிரி ஸ்பாண்டேனியஸ் கிரியேட்டிவிடி இல்ல. அல்லது மொத வாரம் 'வாட்சிங் மோட்'ல இருக்காரான்னு தெரியல. அவர் உள்ள போறதுக்கு டிரெய்னிங் கொடுக்கற மாதிரி அவர் யூட்யூப் சேனல்ல வந்திருந்த வீடியோல இருக்கற கிரியேடிவிடில்லாம் இன்னும் பிக்பாஸ் வீட்ல இறக்கல.

‘இளைஞர்களுக்கு வாய்ப்பு தரணும்’னு சொன்ன ஒரே காரணத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு பூமர் காந்தியை திரும்பத் திரும்ப டார்கெட் பண்ணிக்கொண்டிருந்தார். மத்தவங்க சப்போர்ட் வேணும், இப்போதைக்கு வயசான டிக்கெட் ரொம்ப நாள் தாங்காது அதனால பூமரை அடிப்போம்னு வீக்கான கணக்கு போடுறார். மொரட்டு பிரவீன், தர்பூசணி வெளியே போயிடும்னு அவர் ஆசையை கணிப்பாகச் சொன்னார். பந்தா பாரு, பிரவீனை வெளியே போவார்னு சொன்னார். ஆனா, கலை கப்பு அடிப்பார்னு சொன்னதுதான் பக்குனு இருந்துச்சு. தர்பூசணி வந்து கம்ருதீன்தான் முதல்ல போவார்னு நேத்து அடிக்க வந்ததுக்குப் பழி வாங்கினார். அப்படிப்பார்த்தா இந்த ஆளும்தான் பதிலுக்கு அடிக்கப்போனார். ஆனா வின்னர் பந்தா பாருவாம், கலை, பாரு, தர்பூசணினு செட்டு செம செட்டுதான் போங்க!

பூமர் காந்தி கணிப்புங்கிறதை விட அவரு ஆசையைச் சொல்றேன்னு ஓரளவு நியாயமான ஆசையைச் சொன்னார். கனி ஜெயிக்கணும், பாரு இந்தவாரமே வெளியப்போகணும்னாரு. அப்சரா, கலை வெளியே போவார்னும், சபரி ஒரு நல்ல எண்டெர்டெயினரா இருக்கிறதால அவர் ஜெயிப்பார்னும் சொன்னார். கனி வந்து ஜெயிப்பது சபரி, வெளியே போவது பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்கும் அரோரா என்றார். ஜெனி பாப்பா வியானா வந்து பூமர் பிரவீண் வெளியே போவார்னும், சபரி ஜெயிப்பார்னும் சொல்லிட்டுப் போனார். ரம்யா  வந்து பூசணி நாயகன் வெளியே போவார்னும், சுபி ஜெயிப்பார்னும் சொன்னார். கானா வினோத் வந்து நேர்மாறா சபரி வெளியே போவார்னும், பூமர் ஜெயிப்பார்னும் பாடினது, ஊரே தெக்கப்போறப்ப நான் வடக்கப்போறேன்னு சொல்றாப்பல இருந்தது. அடுத்து ஆதிரை வந்தார். எல்லா விசயத்திலும் மூக்கை நுழைக்கும் பாரு வெளியே போவார்னு சொல்லி, ஓட்டரசியலுக்காக திவாகர், பாரு, கலை கூட்டணி செட்டு சேர்கிறது என்றும் முதல் ஆளாக சரியாகக் கணித்தார். சுபி ஜெயிப்பார்னு சொன்னார். நந்தினியும் வந்து பாருவைப் போட்டுத்தள்ளிவிட்டு,  சபரி ஜெயிக்க வாய்ப்பிருக்கு என்றார்.

Housemates assembled for captain task
Housemates assembled for captain task@jiohotstar

அடுத்து வந்த கலை, தான் ஏன் உள்ளே இருக்க வேண்டுமென்பதற்கான காரணத்தை சரியாகச் சொன்னார். தன் செட்டாக இருந்தாலுமே தர்பூசணி வெளியே போவார் என்று சொன்னார். கலை ஆபத்தான முதல் சில வாரங்கள் தாண்டினால், கொஞ்சநாள் தாக்குப்பிடிக்க வாய்ப்பிருக்கு. கமருதீன் வந்து பூசணி வெளியே போவார், கலை ஜெயிப்பார்னு சொன்னார்.

நாலு நாளிலேயே சபரி, பெரும்பாலானோரின் ஆதரவையும், பூசணியும், பாருவும் பெரும்பாலான எதிர்ப்பையும் இதுவரை சம்பாதித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வரும் நாட்களில் என்னவாகிறது என்று பார்ப்போம்.

அடுத்த கேப்டன் பதவிக்கான தொடர் போட்டிகளை அறிவித்தார் பிக்பாஸ். பால் பொங்குது போட்டியில் சிலபல அடிதடிகளுக்குப் பின்னர் சிலர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இடையே கிளீனிங் வேலை செய்கையில் நேற்று பந்தா பாரு, சுபியைக் கடுப்பேற்றியதைப்போல இன்று ஜெனிபாப்பாவைக் கடுப்பேற்றிவிட்டு ‘வீடுபெருக்க மாட்டேன்’ என்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடினார்.  அவரைத் தனியே சந்தித்து சமாதானப்படுத்த சுபி முயன்றுகொண்டிருந்தார். பந்தாவும் முதலில் ’நான் செய்தது, நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்க வேண்டுமே, என்பதற்காகத்தான்’ என்று பல்டி அடித்தார். ‘சரி அப்ப வா, வீடு பெருக்கு’ என்று சுபி சொன்னதும், மீண்டும் ‘முடியாது’ என்று பல்டியடித்து சுபியின் மண்டையை மெண்டலாக்கிவிட்டார்.

Conversation Between Vj Paaru and Viyana
Conversation Between Vj Paaru and Viyana@jiohotstar

அதன்பின் நடந்ததுதான் இன்றைய நாள் பஞ்சாயத்து. ’பாரு வீடு பெருக்குவாரா மாட்டாரா’. மொத்த வீட்டையும் கூட்டி வைச்சி பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருந்தார்கள். சுபியும், ஜெனிபாப்பாவும், அக்கறையா சொன்ன சில விசயங்களை டிவிஸ்ட் பண்ணி பிரச்சினையாக்கிய பந்தா நடுவில் நின்றுகொண்டு எல்லாக் கதையையும் அவருக்கு சாதகமா புட்டுப் புட்டு வைத்தார். பாருவுக்கு ஆதரவாகப் பேச வந்த பூசணிக்கும், கெமிக்கும் சண்டை ஏற்பட்டது. கடுப்பு தாங்காமல் ஸ்பீக்கர் வந்து கத்தின கத்தில் சண்டை சில விநாடிகளுக்கு நின்றது.  அந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஒருவழியாக தீர்ப்பு சொல்ல வந்த பூமர், தன் உரையை ஆரம்பிக்கும் போது, ‘பாரு ஒரு சின்னப்பெண்..’ என்று ஆரம்பித்ததும் பந்தா பாருவுக்கு ஒரே பெருமை! ‘அந்தச் சின்னபெண்ணுக்குக் கண்ணு தெரியலைன்னு சொன்னது யாராயிருந்தாலும் தப்புதான்’ என்று என்ன நடந்தது என்று தெரியாமல் சொன்னதும், சுபி கடுப்பாகி அழுதுகொண்டே ஓட பூமரை இழுத்து ‘நீ தீர்ப்பு சொன்னது போதும்யா’ என்று உட்கார வைத்தார்கள். அடுத்து, கமருதீன் தீர்ப்பு சொல்ல எழுந்ததும் பாரு அதை நடக்க விடாமல் உழப்பியடித்து விட்டு ஓடிவிட்டார். அதற்குள் பிக்பாஸும், தண்ணிபுடிக்க வாங்கடான்னு தண்ணியை திறந்துவிட பஞ்சாயத்து பாதியில் முடிந்தது.

இன்றைய அதிர்ச்சி: பெட்ரூமுக்குள், ’என்ன இன்னைக்கு யாரும் சொந்தக்கதை சோகக்கதை சொல்லல? பிக்பாஸ் மறந்துட்டாரா?’ என்று ரம்யா கேட்டது.

இன்றைய ரசனை: சபரியும் கெமியும், கேமிரா முன்னால் கனி, அப்சராவை அழைத்துவந்து ’சமைக்கத் தெரிஞ்ச கனி போட்டியிலேயே கலந்துகொள்ள முடியல, கிச்சன் பக்கமே போகாத அப்சரா அட்டகாசமா பால் கொதிக்க வைச்சிட்டார்’ என்று பால் விவகாரத்தை வைத்து கலாய்த்தது அழகாக இருந்தது. 

இன்றைய எக்ஸ்ட்ரா: இந்த சுபி, பாரு பஞ்சாயத்து இவ்ளோ பெரிசா போகுதே என்று கடுப்பாகி, லைவில் இருந்து 24x7 பிக்பாஸைப் பார்த்தால், அதில் காலையிலிருந்தே அதை மட்டும்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் போல. கடுப்பாகவே இருந்தது. ஆனால் வெளியே துஷார், அரோரா, பிரவீண் காந்தி மூவரும் பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருந்தது. பிக்பாஸ் ஸ்டிராட்டஜி, இதற்கு முன் பிக்பாஸ் வின்னர்கள், உறவுகள் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பிரவீண் காந்தி, ‘இப்ப இந்த சீசன் சூடு பிடிக்கணும்னா ஒரு ஐடியா சொல்றேன். நீ என்னை லவ் பண்ணணும். நான் வேணாம்மா இது தப்புனு சொல்லணும். ஆனா நீ என்னை சீரியஸா லவ் பண்ணணும். அப்டி நடந்தா செம டிஆர்பி வரும்’ என்று அரோராவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். 


 ‘எனக்கு மேரேஜ் ஆகல. அதுனால நிறைய பெண்கள் ப்ரபோஸ் செய்வாங்க. நான் நடிச்ச துள்ளல் படத்துல ரெண்டு ஹீரோயின். அவ்ளோ அழகா இருப்பாங்க. அது போக எனக்கு வெளில ஒரு ஆள் இருக்கு’ என்று பெருமையாகச் சொல்ல நமக்கு 'உஸ்ஸ்ஸ்ஸ்' மொமண்ட்! அரோராவும், ‘மன்மதனே நீ கலைஞன்தான்’ என்று பாடி ஓட்டினார். பிறகு அரோரா ‘அதான் உங்களுக்கு ஆள் இருக்குல்ல.. அப்றம் நான் ஏன் ப்ரபோஸ் பண்ணணும்?” என்று கேட்டதற்கு,  ‘அந்த ஆளை மறக்கடிக்கற அளவுக்கு என்னை லவ் பண்ணணும் நீ’ என்றார்.

தங்கதொர.. எல்லாம் ஒரு அளவுக்குத்தான்!

Puthuyugam
www.puthuyugam.com