வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் இழப்புகள் பலவிதம். அது ஒரு உறவாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த வழிகள் உங்களுக்கு உதவலாம்.
இழப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் :
முதலில் இழப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதுதான் முதல் படி. அந்த வலியைப் புறக்கணிக்காமல் அது தரும் துயரத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அழ வேண்டும் என்று தோன்றினால் அழுது விடுங்கள். உங்கள் உணர்வுகளை அடக்காமல் வெளிப்படுத்துவது அவசியம்.
உங்கள் உணர்வுகளை பகிருங்கள் :
நீங்கள் தனியாக இல்லை. இந்த துயரத்தைப் பற்றி உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுங்கள். உங்கள் மனதிற்குள் இருக்கும் பாரத்தை பகிர்ந்து கொள்வது அதை இலகுவாக்க உதவும்.
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் :
உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யுங்கள். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, படம் வரைவது அல்லது ஒரு புதிய கலையைக் கற்றுக்கொள்வது என எதுவாக இருந்தாலும் உங்கள் மனதை வேறு திசையில் திருப்பும் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.
எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள் :
நிகழ்காலத்தில் வாழ்வது கடினமாக இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தை நினைவில் கொள்வது அவசியம். சின்ன சின்ன இலக்குகளை முடிவு செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இழப்பின் வலி மெதுவாகத்தான் மறையும் அல்லது பழகும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம் என்பதை நம்புங்கள். வாழ்க்கை ஒருபோதும் நின்றுவிடாது. துயரங்களில் இருந்து மீண்டு வருவது என்பது ஒரு கலை. அது உங்களை மேலும் வலிமையானவராகவும், பக்குவமடைந்தவராகவும் மாற்றும்.
சொல்வது சுலபம் தான் ஆனால் இந்த வலியிலிருந்து மீண்டு வருவது கடினம் தான். வேறு என்ன செய்வது? இதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துதான் ஆக வேண்டும்.