லைஃப்ஸ்டைல்

ஆஹா...! இதுதானா!! தனது ஸ்லிம் ரகசியம் பகிர்ந்த குஷ்பு!

இந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் நடிகை குஷ்பு இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், அவர்களது உடல் இளைத்திருந்தது குறித்து பலரும் பாராட்டி, குஷ்புவைப் புகழ்ந்திருந்தனர்.

எம். குமரேசன்

உடல் எடையை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு , நல்ல மனக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் , உணவுக்கட்டுப்பாடும் அவசியம். சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று சில நாட்கள் ஜிம்முக்கு போவார்கள். உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பின்னர், முயற்சியை கைவிட்டு விடுவார்கள். சுயக்கட்டுப்பாட்டுடன் ஒழுங்கும் இருந்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும்.

Khushbu

அந்த வகையில், நடிகை குஷ்பு ஒரே ஆண்டில் 20 கிலோ எடையை குறைத்து வியப்பை ஏற்படுத்தினார். அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையைக் குறைத்து 'எப்படி இவ்வளவு கமிண்ட்மெண்ட்!' என்று ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.

கடந்த சில வருடங்களாக குஷ்புவுக்கு பல உடல் நல பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு முழங்காலில் பலமுறை அறுவைசிகிச்சையும் நடைபெற்றுள்ளது. இந்த சமயதில்தான், மருத்துவர்கள் உடல் எடையை குறைக்க வலியுறுத்தியுளளனர். அதனால் , எடை குறைப்பு முயற்சியில் குஷ்பு ஈடுபட்டார். தொடர்ந்து , தனது நியூ லுக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரையும் மிரள வைத்திருந்தார்.

இருந்தாலும் நமது ரசிகர்கள் சந்தேகப் பேர்வழிகள் அல்லவா? "ஊசி மூலம் உடல் எடையை குறைத்தீர்களா?" என்றும் சிலர் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு, "தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும், மாலை 45 முதல் 50 நிமிடங்கள் நடைப்பயிற்சியும் மேற்கொண்டேன். மாலை நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் ஒரு மணி நேர உடற்பயிற்சியை கூடுதலாகச் செய்வேன். ஒழுக்கமான உணவுப்பழக்கம், நிலையான உடற்பயிற்சி முக்கியம். இவையே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள போதுமானது. செயற்கை முறையில் எடையைக் குறைக்காமல் இயற்கையாக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைத்தேன்" என்று பதிலளித்தார்.

குஷ்பு - சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் பல திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளார்கள். குஷ்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்தும் வருவார். இதனால், அவர்களையும் பலருக்குத் தெரியும். இந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் நடிகை குஷ்பு இன்ஸ்டாவிலும் ட்விட்டரிலும் தனது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் குஷ்புவின் இரு மகள்களுமே தாயைப் போலப் பிள்ளை என்பது போல உடல் இளைத்துக் காணப்பட்டனர்.

Khushbu Sundar C daughters

இதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமும் வியப்பும் அடைந்து குடும்பத்தினரை வாழ்த்திப் பதிவிட்டு வந்ததைக் காணமுடிந்தது.

நடிகை குஷ்புவின் மகள்கள் இருவருமே, நீண்ட காலமாக சுயக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளனர். இருவரின் புகைப்படமும் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று?

இது குறித்து குஷ்ப் கூறுகையில், 'உணவுக்கட்டுப்பாடு, வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது, உடற்பயிற்சி, யோகா போன்றவையை உடல் எடை குறைய முக்கிய காரணம். உடல் எடையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் பட்டினி கிடப்பது டேஞ்சரானது. பேலன்ஸான உணவுகளுடன் முறையான உடற்பயிற்சி அவசியம். யோகா செய்வது, நடனம் ஆடுவது போன்றவையும் உடல் எடையைக் குறைக்க வெகுவாக உதவும். வயது ஒரு தடையல்ல. 30 வயதைக் கடந்தவர்கள் முறையான பயிற்சியாளர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி உடல் எடையை எளிதாக குறைக்கலாம் 'என்கிறார்.

நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா இயக்குநர் ஆகவுள்ளார் என்றும், இளையமகள் அனந்திதா நடிக்க போவதாகவும் தகவல் உள்ளது. மூத்த மகள் இயக்கும் படத்தையும், இளைய மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தையும் குஷ்பு - சுந்தர் சி. யின் தயாரிப்பு நிறுவனமான ஆவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.