உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ஜூன் , ஜூலை மாதத்தில் நடைபெறுகிறது. அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் முதமுறையாக 48 அணிகள் பஙகேற்கின்றன. தற்போது, தகுதி சுற்று ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில், ஆப்பிரிகக கண்டத்தில் இருந்து குட்டி நாடு என்று தகுதி பெற்று அசத்தியுள்ளது. பிரிவு 'டி 'யில் இடம் பெற்றிருந்த கேப் வெர்ட் (Cape Verde) என்ற நாடுதான் அது. கேப் வெர்ட், கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் Eswatini அணியை சந்தித்தது. இதில், 3 கோல்கள் அடித்து Cape Verde அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 23 புள்ளிகள் பெற்று, முதன்முறையாக, உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதே பிரிவில் 'ஆப்பிக்கன் பவர் ஹவுஸ்' காமரூன் அணியும் இடம் பெற்றுள்ளது. இந்த அணியால் இரண்டாவது இடம்தான் பிடிக்க முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற Cape Verde நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5.25 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை பெற்ற இந்த நாடு , ஆப்பிரிக்க கோப்பை தொடருக்கு 4 முறை தகுதி பெற்றள்ளது. அவற்றில், இரு முறை காலிறுதி வரையும் முன்னேறியுள்ளது. தங்கள் நாடு, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளதால், அந்த நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக , கடந்த 2018ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு ஐஸ்லாந்து அணி தகுதி பெற்றிருந்தது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 3.50 லட்சம்தான். உலகக் கோப்பை தொடருக்கு குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக தகுதி பெற்ற ஒரே நாடு ஐஸ்லாந்துதான். கடந்த 2016ம் ஆண்டு ஐரோப்பியக் கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறி அசத்தியிருந்தது ஐஸ்லாந்து.
தென் அமெரிக்க நாடானா பாரகுவே கால்பந்து உலகில் பரவலாக அறியப்படும் அணி. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 10 லட்சத்துக்கும் கீழ்தான். இந்த அணி 1930ம் ஆண்டு, முதல் உலகக் கோப்பைத் தொடரிலேயே விளையாடத் தொடங்கியது. 2026ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 9வது முறையாக விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்கு Trinidad and Tobago அணி தகுதி பெற்றிருந்தது. கரீபியன் தீவான, இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 13 லட்சம்தான். அந்த உலகக் கோப்பைத் தொடரில், பங்கேற்ற குட்டி அணி அதுதான். லீக் ஆட்டத்திலேயே, இந்த அணி தோல்வி கண்டு வெளியேறி விட்டது.
அதேபோல, உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்ற மற்றொரு குட்டி அணி வடக்கு அயர்லாந்து. இந்த அணி கடந்த 1958ம் ஆண்டு பல ஜாம்பவான் அணிகளுக்கு 'ஷாக் ' கொடுத்தது. இந்த அணி இடம் பெற்றிருந்த' ஏ' பிரிவில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, செக்கஸ்லோவாகியா என வலுவான அணிகள் இடம் பெற்றிருந்தன. முதல் ஆட்டத்தில் செக்கஸ்லோவாகியா அணியை வீழ்த்திய வடக்கு அயர்லாந்து அர்ஜெண்டினா அணியிடம் தோற்றது. அடுத்து , ஜெர்மனி அணியுடன் டிரா கண்டது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியது. நாக்அவுட் ஆட்டத்தில் வலுவான பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது. 1982 மற்றும் 1986ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் வடக்கு அயர்லாந்து அணி விளையாடியுள்ளது.