Puthuyugam Logo Puthuyugamtv - Facebook
சினிமா

புதுயுகம் தொலைக்காட்சி – மக்கள் மனதில் பதிந்த 12 ஆண்டுகள்!

தொடக்க ஆண்டிலிருந்தே, தமிழ் சினிமா மற்றும் சின்ன திரை நட்சத்திரங்கள் இணைந்த சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புதுயுகம் தன்னை மக்கள் மனதில் பதியச் செய்தது.

வினோத்

சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மக்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு மக்களுக்கான பொழுதுபோக்கு சேனலாக “புதுயுகம் தொலைக்காட்சி” ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கிய காலத்திலிருந்தே புதுயுகம், தனது பெயரைப் போலவே, தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியது. “யுகம் டவுன்” என்ற தனித்துவமான அணுகுமுறையுடன் தொடங்கிய இச்சேனல், மற்ற சேனல்களிலிருந்து வேறுபட்ட வண்ணம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாது, இத்துறையில் பெரிய அளவில் விரும்பப்பட்ட தொலைக்காட்சியாகவும் மாறியது.

தொடக்க ஆண்டிலிருந்தே, தமிழ் சினிமா மற்றும் சின்ன திரை நட்சத்திரங்கள் இணைந்த சிறப்பு நிகழ்ச்சிகளுடன் புதுயுகம் தன்னை மக்கள் மனதில் பதியச் செய்தது. நடிகை சிம்ரன் நடித்த அக்னி பரவை, நடிகை சோனியா அகர்வால் நடித்த மல்லி, நடிகை அம்பிகா நடித்த சரிகம கம கம, நடிகை அர்ச்சனா நடித்த உணர்வுகள், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்த அரங்கேற்றம், இயக்குநர் சமுத்திரக்கனி தயாரித்த காயிதம் போன்ற தொடர்களும், இயக்குனர் பாண்டியராஜன் தொகுத்து வழங்கிய டாக் இட் ஈஸி, நடிகை சினேகா தொகுத்து வழங்கிய மேளம் கொட்டு தாலிக் கட்டு, நடிகை அபிராமி தொகுத்து வழங்கிய ரிஷிமூலம், நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய நட்சத்திர ஜன்னல் போன்ற நிகழ்ச்சி தயாரிப்புகளும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

Stepping into 13th Year

தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன்முறையாக கொரியன் தொடர்களைத் தமிழாக்கம் செய்து மக்களுக்குக் காட்டிய சேனல் என்ற பெருமையும் புதுயுகத்துக்கே உரியது. இதன் மூலம் சர்வதேச அளவிலான கதை சொல்லும் முறைகளை தமிழ்மக்களிடம் கொண்டு சேர்த்த முதல் முயற்சியாக அது பார்க்கப்பட்டது.

காலம் கடந்து இன்று 13ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுயுகம், இன்னும் மக்கள் மனதில் தன் இடத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. “ஆலையங்கள் அற்புதங்கள் ”, “என்றென்றும் இனியவை”, “இப்படிக்கு காலம்”, “நீ இன்றி அமையாது உலகு”, “நம்ம திருவிழா”, “ஆற அமர”, “நேரம் நல்ல நேரம்”, “யுகம் கனெக்ட்”, “இப்படித்தான் நான்”, “உலகம் பேசுகிறது”, “சினிமா 2.0”, “555 மல்டி ப்ளக்ஸ்”, “திரையாடல்”, “பாமு பாபி”, “பிளஸ் மைனஸ்”, “சட்டம் ஒரு வகுப்பறை” போன்ற பல நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பாகி, குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக தரமான நிகழ்ச்சிகள், சமூக உணர்வும்-மகிழ்ச்சியும் கலந்த தொகுப்புகள், மற்றும் தொழில்நுட்ப நவீனங்களுடன் இணைந்த காட்சிமுறைகள் ஆகியவற்றால், புதுயுகம் தன்னைத்தானே புதுப்பித்து கொண்டே வருகிறது.மேலும் இன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொலைக்காட்சி உலகையே மாற்றிவிட்டது. அதனை முழுமையாகப் பயன்படுத்தி, புதுயுகத்தில் இன்னும் பல புதுமையான நிகழ்ச்சிகளை விரைவில் மக்களுக்குக் கொண்டு வரவுள்ளது.

12 ஆண்டுகள் நிறைவில் இன்னும் உற்சாகமாக இயங்கும் புதுயுகம் தொலைக்காட்சி, புதிய தலைமுறையையும், பழைய ரசிகர்களையும் இணைக்கும் ஒரு பொதுத்தளமாக மாறி வருகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் பல புதிய நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் , விவாதங்கள், தொடர்கள், சினிமா சிறப்புகள் என பல புதிய முயற்சிகளுடன் புதுயுகம் மக்கள் வீடுகளில் ஒளிரத் தயாராகி வருகிறது.