Host Vijaysethupathi @jiohotstar
BiggBoss 9

வியானாவைப் புரியவைக்க முயன்று களைத்துப்போன விஜய் சேதுபதி! #Biggboss Day 97

'நீங்கள் விக்ரம் மீது காண்பித்த வன்மத்துக்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது. ஒரே ஒரு விஷயத்தைக் கூட எடுத்துச் சொல்லி, அவரால் அவரது கருத்தை நியாயப்படுத்த முடியவில்லை.

ஆதி தாமிரா

ஒரு பீன் பேகில், பட்டப்பகலில், வீட்டு முற்றத்தில் பப்பரக்கா என்று மல்லாக்கப் படுத்துத் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார் தர்பூசணி. அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்து, துக்க வீட்டில் அழுவதைப்போல அழுது நடித்தபடி ஃபன் பண்ணிக் கொண்டிருந்தனர். அது அத்தனை ரசிக்கும் படியானதாக இல்லை. ஆனால், அத்தனை பேர் அவ்வளவு நேரம் பர்ஃபார்மென்ஸ் பண்ணிக் கொண்டிருந்தபோதும் அந்த ஆள் கண் விழிக்கவே இல்லை என்பதுதான் காமெடியாக இருந்தது. மேலும், வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சிகளாகக் காண்பிக்கப்பட்டவற்றில் சுவராசியமாக அப்படி ஒன்றுமில்லை.

விஜய் சேதுபதி வந்ததும், முதல் கேள்வியாக வெளியே போனவர்களிடம் அவர்களுக்கான வெளியுலக வரவேற்பு எப்படி இருந்தது என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள். பிரவீன் காந்தி, பிரவீன்,  தர்பூசணி போன்றோர் தங்களுக்குக் கிடைத்த புதிய பட வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்கள். அதுவும் பிரவீன் காந்தி, அடுத்து பிரசாந்தோடு இணைந்து ‘ஜோடி 2’ படம் இயக்கப் போவதாகச் சொன்னது நமக்கு ஆச்சரிய அதிர்ச்சியைத் தந்தது. பயத்தை ஏற்படுத்தியது என்று கூடச் சொல்லலாம். 

வியானா வெளியே போனதும், அவர் தம் வீட்டு வாசலில் எக்கச்சக்கமான இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கிடப்பார்கள் என்று கனவு கொண்டிருந்திருப்பார் போலிருக்கிறது, அது நடக்காததனால், அவரது முகம் மட்டும் சற்று காற்றிறங்கிய பலூனாகக் காணப்பட்டது.அடுத்து, பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போன வினோத்தை மேடைக்கு அழைத்தார் விஜய் சேதுபதி. பொருளாதாரமும், அங்கீகாரமும் கிடைக்காத ஒரு கலைஞனின் மனக்குழப்பமும், வேதனையும் வினோத்திடம் வெளிபட்டது. அந்த மனநிலையில், ’நான் விருந்துக்காகக் காத்திருக்க முடியாது, கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும் என்று நினைத்துதான் நான் இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதற்கு யாரும் காரணமும் இல்லை. இது எனக்குப் போதும்’ என்ற உண்மையான அவரது காரணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், பணத்தை விடவும் டைட்டில் முக்கியம்தானே, அதை விட்டு விட்டாரே என்று நம்மில் பலரும் கருத்து கூறுவதைக் காண முடிகிறது. ஆனால், டைட்டிலுக்கு எப்படி, யார்தான் கேரண்டி தர முடியும்? அவரது மனைவியுமே கூட, அவரது போதும் என்ற மனநிலையை ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் மீறி வினோத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரமே என்னுடைய முதல் மன நிறைவு என்பதையும் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியுமே, வினோத்தைக் கட்டியணைத்து, மனதாரப் பாராட்டி அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் பிரவீனையும், வியானாவையும் குறி வைத்தார் விசே! வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்த இந்த முன்னாள் போட்டியாளர்களின் வன்மமான நடவடிக்கைகளை, பேச்சுகளை கடந்த சில நாட்களாக நாமும் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். குறிப்பாக பிரவீன் மற்றும் வியானா! ஒருவேளை அவர்களுக்குப் பின்னால், பிக்பாஸின் திருவிளையாடல் இருந்திருக்குமோ எனும் சந்தேகம் கூட நமக்கு இருந்தது. ஆனால், விஜய் சேதுபதி இதை விசாரித்ததன் மூலம் அப்படி நடக்கவில்லை என்பதும், அவை போட்டியாளர்களின் தனிப்பட்ட முதிர்ச்சியற்ற வன்மம்தான் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்தது.

Vikkals Vikram

அடுத்து, பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போன வினோத்தை மேடைக்கு அழைத்தார் விஜய் சேதுபதி. பொருளாதாரமும், அங்கீகாரமும் கிடைக்காத ஒரு கலைஞனின் மனக்குழப்பமும், வேதனையும் வினோத்திடம் வெளிபட்டது. அந்த மனநிலையில், ’நான் விருந்துக்காகக் காத்திருக்க முடியாது, கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும் என்று நினைத்துதான் நான் இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதற்கு யாரும் காரணமும் இல்லை. இது எனக்குப் போதும்’ என்ற உண்மையான அவரது காரணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், பணத்தை விடவும் டைட்டில் முக்கியம்தானே, அதை விட்டு விட்டாரே என்று நம்மில் பலரும் கருத்து கூறுவதைக் காண முடிகிறது. ஆனால், டைட்டிலுக்கு எப்படி, யார்தான் கேரண்டி தர முடியும்? அவரது மனைவியுமே கூட, அவரது போதும் என்ற மனநிலையை ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் மீறி வினோத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரமே என்னுடைய முதல் மன நிறைவு என்பதையும் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியுமே, வினோத்தைக் கட்டியணைத்து, மனதாரப் பாராட்டி அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் பிரவீனையும், வியானாவையும் குறி வைத்தார் விசே! வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்த இந்த முன்னாள் போட்டியாளர்களின் வன்மமான நடவடிக்கைகளை, பேச்சுகளை கடந்த சில நாட்களாக நாமும் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். குறிப்பாக பிரவீன் மற்றும் வியானா! ஒருவேளை அவர்களுக்குப் பின்னால், பிக்பாஸின் திருவிளையாடல் இருந்திருக்குமோ எனும் சந்தேகம் கூட நமக்கு இருந்தது. ஆனால், விஜய் சேதுபதி இதை விசாரித்ததன் மூலம் அப்படி நடக்கவில்லை என்பதும், அவை போட்டியாளர்களின் தனிப்பட்ட முதிர்ச்சியற்ற வன்மம்தான் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்தது.

முதலில் பிரவீனை எழுப்பி, ’இங்கிருக்கும் போட்டியாளர்கள் அவர்களின் மனிதத் தன்மையை இழந்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினீர்கள். நாங்கள் இங்கு இத்தனை பேர் இருக்கிறோம், நல்லது கெட்டதுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். வார இறுதியில் அவர்களது செயல்களை விமர்சித்து வழிகாட்டுகிறோம். அதை மீறி நாங்கள் பார்க்காத ஒன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றால், மனிதத்தன்மையை இழந்துதான் இந்த இடத்துக்கு இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று ஒரு கடுமையான விமர்சனத்தை வைக்குமளவுக்கு அப்படி என்ன நடந்தது? அப்படி எதைப் பார்த்தீர்கள்? அதைச் சொன்னால் நாங்கள் எங்களைத் திருத்திக்கொள்வோம்’ எனுமளவுக்குப் ஒரு பெரிய வலையை விரித்தார் விஜய் சேதுபதி. 

Gana Vinoth

நன்கு பேசத்தெரிந்தவர்கள் கூட இந்த வலைக்குத் தப்ப முடியாது. பிரவீனால் எப்படி முடியும்? அவரால், அவர் சொன்ன வார்த்தைக்கு சமாதானம் சொல்லும் அளவுக்கு எதையும் விளக்கவோ, விவரிக்கவோ அவரால் முடியவில்லை. பெப்பெப்பே என்று முடிந்த அளவுக்கு உளறிப் பார்த்தார். ஸ்மைலி பந்தால் அடித்ததைச் சொல்லிப் பார்த்தார். அது ஒரு டிஸ்ட்ராக்‌ஷன் மட்டுமே என்று காரணம் சொல்லப்பட்டது. கார் டாஸ்க்கை சொல்லிப் பார்த்தார். ஆனால், அதற்கு காரணமானவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள், நீங்கள் குறிப்பிட்டது இங்கே இருப்பவர்களை என்று சொல்லப்பட்டது!

அதெல்லாம் சரிதான். என்னதான் பிரவீனின் வார்த்தைகளும், சிந்தனையும் தவறு என்றாலும், அதை அவருக்குத் தெளிவாகப் புரிய வைப்பதில் விஜய் சேதுபதி தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பதிலாக அவரையும், இந்த நிகழ்ச்சியையும் பிரவீன் குற்றம் சாட்டிவிட்டார் என்ற கோபத்தை வெளிப்படுத்தியதைப் போலத்தான் தோன்றியது நமக்கு! இதைப் போன்ற அரிதான இடங்களில்தான், கமல்ஹாசனை நாம் மிஸ் செய்கிறோம். கமல்ஹாசன் இருந்திருந்தால் அவர், பிரவீன் செய்த தவறைத் தெளிவாகவும், சரியாகவும், பிரவீனே ஏற்றுக்கொள்ளும் படியும் அவருக்குப் புரிய வைத்திருப்பார்.

Divyaganesh

அடுத்து, வியானாவை எழுப்பி விட்டார். பிரவீனுக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் போதே மேடத்துக்கும் தெரிந்து விட்டது, அடுத்த அபிஷேகம் நமக்குத்தான் என்று. ‘நினைத்தேன்’ என்று முனகியபடியேதான் எழுந்தார். ’நீங்கள் விக்ரம் மீது காண்பித்த வன்மத்துக்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது. ஒரே ஒரு விஷயத்தைக் கூட எடுத்துச் சொல்லி, அவரால் அவரது கருத்தை நியாயப்படுத்த முடியவில்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நம் யாருக்கும் விளங்கவில்லை, நமக்குத்தான் விளங்கவில்லை என்று நினைத்தால் அது விஜய் சேதுபதிக்கும் விளங்கவில்லை. அவர், மற்ற போட்டியாளர்களுக்கு ஏதாவது விளங்குகிறதா என்று கேட்டதற்கு, அவர்களும் இல்லை என்று மண்டையை ஆட்டிவிட்டார்கள். சரிதான்! இந்த பிக்பாஸ் விளையாட்டை, வெளியே போய்ப் மொத்தமாகப் பார்ப்பதற்கு, ஒரு முதிர்ச்சியும், பெருந்தன்மையும் வேண்டும். அதில்லாத வியானா அதை சுயநலமாகப் புரிந்துகொண்டு, அதில் கடுப்பானதால் வந்த விளைவுதான் இது. சகப் போட்டியாளர்களும், விஜய் சேதுபதியும் அவருக்கு எதையுமே புரிய வைக்க முடியவில்லை. வியானா கேஸில் கமல்ஹாசனாலும் அது முடிந்திருக்காதுதான். கடைசி வரை எதையும் புரிந்து கொள்ளாமலேதான் உட்கார்ந்தார்.