Sandra amy & Amit Bhargav @jiohotstar
BiggBoss 9

பாருவைக் குழப்பிவிட்ட விருந்தினர்கள்! #Biggboss Day 80

‘அடேய், பைத்தியக்காரா… பாருதான் இந்த விசயத்தில் முதல் கல்ப்ரிட்டே! அப்பேர்ப்பட்ட பாருவையே மேனிபுலேட் செய்யும் வல்லமை கொண்டவர் சாண்ட்ரா! ஹிந்தி, மலையாளம் என்று எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் பார்த்து வந்திருக்கிறார் சாண்ட்ரா

ஆதி தாமிரா

அமித்தும், சாண்ட்ராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கனி மற்றும் திவ்யாவுடன் தற்போது குழு அமைத்திருப்பதால் கிடைத்த திடீர் ஞானோதயத்தால் சாண்ட்ரா, அமித்துக்கு சில அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

’நீ கொஞ்சம் இந்தப் பாருவுடன் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரமும் அவளோடு சுற்றிக் கொண்டிருக்கிறாய்’ 

’இப்படித்தான் அவர்களும் சொல்கிறார்கள், நீயும் இப்படிச் சொன்னால் எப்படி?’ என்று அமித் மூக்கைச் சிந்த, ’அது என்னவோ எனக்குத் தெரியாது. அவள் லேசுப்பட்டவள் இல்லை. உன்னை லாக்கர்ல மாட்டிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாள். அதனால் எச்சரிப்பதற்காக சொல்கிறேன். அப்புறம் உன் விருப்பம்’
’ஆனால், நான் என்ன செய்வது? நான் போய்ப் பேசினால், நீயும், அவளும் மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா நினைத்துப் பேசுகிறீர்கள். மற்றவர்கள் எல்லோரும் குளோஸ்ட் குரூப்பாக இருக்கிறார்களே’

’அது என்னவோ உண்மைதான். எனக்கும் அப்படித்தான் இருக்கிறது’
எண்பது நாட்கள் கழித்து இன்னும் கனியின் தலைமையில் ஒரு அன்புக்குழு இயங்கிக் கொண்டிருப்பதாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு குழுவே இல்லை. இவர்கள் தலையிலிருக்கும் கிரீடத்தைக் கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு போய்ப் பேசினால் அவர்கள் தன்னைப் போல இயல்பாக பேசி விடப்போகிறார்கள். இந்த இரண்டு பேருக்கும் ஒரு நட்பை எப்படித் தொடங்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை என்பதுதான் உண்மை.

Aurora Sinclair and Kamurudin

கிச்சன் ஏரியாவில், அமித் பாடிய ஒரு பாட்டால் பாருவும், சான்ட்ராவும்  முட்டிக் கொண்டார்கள். இரண்டு பெண் சிங்கங்கள் மோதிக்கொள்ளத் தயாரானது போலவும், ஆனால், இருவருமே ஒருவரைப் பார்த்து ஒருவர் இப்போது நான் சண்டை போடுகிற மூடில் இல்லை என்று பின் வாங்கியது போலவும் இருந்தது அந்தக் காட்சி. பாருவுக்கு, குடும்ப வீக்கில் தன் குடும்பம் எப்போது வரப்போகிறது, நாம் என்னவாகப் போகிறோம் என்ற பிரச்சினை இருந்ததால் அவருக்கு இதில் கவனமில்லை. சாண்ட்ராவுக்கு போன வாரம்தான் நாம் நம் திருவிளையாடலை நடத்தியிருக்கிறோம், மீண்டும் ஒரு வீக்கெண்ட் பஞ்சாயத்தை கிளப்ப வேண்டுமா எனும் தயக்கம். இப்படி இருவருக்கும் தகுந்த காரணங்கள் இல்லாமலிருந்தால் இங்கு ஒரு களேபரம் நிச்சயம் நடந்திருக்கும்.

 
பூரியை அப்பளம் போல சுட்டுக் கொண்டிருந்த அமித்தைப் பார்த்து வினோத் கமெண்ட் அடிக்க அவர்கள் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. ஆண்களுக்குள் வரும் சண்டை ஐந்து நிமிடத்துக்குத்தான் என்பது போல கொஞ்ச நேரத்திலேயே விட்டுக்கொடுத்துக் கொண்டார்கள். கொஞ்சம் ஆணாதிக்க ஸ்டேட்மெண்ட்போல இருந்தாலும் நேற்று நடந்தது அப்படித்தான் இருந்தது!

இன்றைக்கு முதலாவதாக அமித்தின் குடும்பம் உள்ளே வந்தது. மனைவியும், அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளே வந்தார்கள். அந்தக் குழந்தை தக் லைஃப் படத்தில் வரும் ‘முத்தமழை’ பாடலை அழகாகப் பாடியது. பிறகு அமித்தும் அவரது மனைவியும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 
‘நீ எதற்காக உள்ளே வந்தாய் அமித்? இங்கு இருக்கக்கூடிய போட்டியாளர்கள் யாரும் மனதுடைந்து அழுது கொண்டிருந்தால், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக உன்னை உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார்களா? என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ, உன் விளையாட்டை எப்போதுதான் விளையாடுவாய்?’ என்று கேட்டார் ஸ்ரீரஞ்சனி.


’அப்படியா வெளியே தெரிகிறது?’

’தெரிகிறதாவா? எந்த நேரமும் சாண்ட்ராவுக்கும், பாருவுக்கும் ஆறுதல் சொல்வது மட்டும்தான் உன் வேலையாக இருக்கிறது. எல்லோரும் அவரவர் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள் அமித், உன்னைத் தவிர!’

‘பாரு, சாண்ட்ரா கூடவா ரஞ்சனி?’

Divya Ganesh

30 நாட்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த வைல்ட் கார்டு போட்டியாளர் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்.

 ‘அடேய், பைத்தியக்காரா… பாருதான் இந்த விசயத்தில் முதல் கல்ப்ரிட்டே! அப்பேர்ப்பட்ட பாருவையே மேனிபுலேட் செய்யும் வல்லமை கொண்டவர் சாண்ட்ரா! ஹிந்தி, மலையாளம் என்று எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கரைத்துக் குடித்துவிட்டு வந்திருக்கிறார் சாண்ட்ரா. நீதான் இந்த இருவருக்குமிடையே ஜோக்கரைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறாய்.’


சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அமித் புரிந்துகொண்டாரா என்பதுதான் தெரியவில்லை! பார்ப்போம்!

மற்றவர்களைப் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் ரஞ்சனி. எல்லோரையும் பற்றி சிறப்பாகச் சொல்லிவிட்டு, பாருவைப் பார்த்து மட்டும், ‘இவள் கேமுக்காக யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவாள், எல்லோரும் ஜாக்கிரதை!’ என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். அவர்கள் வெளியே போனதும் பாரு, அமித்தைத் தள்ளிக்கொண்டு போய், ‘உன் மனைவி என்னடா என்னைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்? நான் எவ்வளவு நல்லவள் என்று உனக்குத் தெரியாதா? என்னைப் பற்றி வேறு ஏதும் சொன்னாரா?’ என்று கேட்டு விசயத்தைக் கறக்கப் பார்த்தார். சற்று உஷாராகிவிட்ட அமித், ‘என்னைப் பற்றிப் பேசவே நேரமில்லை, இதில் எங்கே உன்னைப் பற்றி பேசமுடியும்?’ என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து, திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. மகளுக்கு அப்பா, ‘அம்மா, அனைவரையும் பேச விட்டுவிட்டு பிறகு உன் கருத்தைச் சொல்! யாரையும் பேசவே விடமாட்டேன் என்கிறாய்!’ என்று சொன்னதற்கு, 

‘அப்படியா இருக்கேன்?’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார் திவ்யா.
அடுத்து, அனைவரிடமும் பேசும்போது திவ்யாவின் அப்பாவும், அம்மாவும், பாருவை சற்றே வைத்துச் செய்துவிட்டார்கள். பதிலுக்குப் பதில் பேசி சமாளிக்க முயற்சி செய்தாலும், பாருவுக்கு முகம் சற்றுக் களையிழந்துதான் போய்விட்டது. படுக்கையில் வைத்து, ‘சாண்ட்ராவிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள் என் பெற்றோர்’ என்று திவ்யா, அரோராவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு, ‘இன்னும் கொஞ்ச நாள்தான், அவர் மட்டுமென்ன? எல்லோருமே தம்மைத் தவிர மற்ற எல்லோரிடமுமே ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று பதில் சொன்னார் அரோரா. இவர் புரிதலுக்கும் அறிவுக்கும் ஃபைனலிஸ்ட் ஆகும் வாய்ப்புகள் பிரகாசமாகவே தெரிகிறது!