Kamurudin and Vj Paaru @jiohotstar
BiggBoss 9

பாரு... கமரு... என்னதான் நடந்தது? #Biggboss Day 74

நாம் ஏன் கமருவை கழுவி ஊற்றுகிறோம் என்பதற்கான இன்னுமொரு உதாரணம் இது. எந்த இடத்தில் எப்படி சமாதானப்படுத்துகிறார் பாருங்கள்.

ஆதி தாமிரா

பல் கூட விளக்காமல் யாரும் லிப் பாமோ, லிப்ஸ்டிக்கோ போட்டுக் கொள்வார்களா என்று தெரியவில்லை, இந்த வீட்டில் ஒரு நபர் அதைத்  தினமும் செய்து கொண்டிருக்கிறார். அது கிடக்கட்டும்!

‘வெளியே எனது அம்மா இதையெல்லாம் பார்த்தால் என்ன நினைப்பாங்க? எனக்கு பயமாக இருக்கிறது’ என்று கமருவை உட்கார வைத்துக் கொண்டு பாரு புலம்பிக் கொண்டிருந்தார். திடீரென்று என்னவாயிற்றோ தெரியவில்லை, அடுத்த வாரம் ஃபேமிலி ரவுண்டில் அம்மாவோ அல்லது வீட்டில் இருந்து யாரோ வந்தால் நம்மை போட்டுப் பொரித்து எடுத்து விடுவார்களோ என்ற பயம் மட்டும் அவரது முகத்தில் பளிச்சென்று தெரிந்தது. இத்தனை நாட்களாக இவ்வளவு அட்டகாசங்கள் செய்து கொண்டிருந்த போதெல்லாம் ’எனது அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன வாய்தான் இது. லவ் கன்டென்ட் செய்து நாட்களை ஓட்டும் எல்லா போட்டியாளர்களும், ஃபேமிலி வீக்குக்கு முன்னால் இப்படி ஒரு இடத்துகு வந்து நிற்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பார்க்கலாம், பாருவின் குடும்பம் என்ன சொல்லப்போகிறது என்பதை!


ஆனால், அவரது புலம்பலை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், ‘என்ன பட்டு இதுக்கெல்லாம் கவலைப்படுகிறாய்? அதெல்லாம் ஒன்றும் ஆகாது’ என்று கொஞ்சியபடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் கமரு.

Vikkals Vikram & Kani

’எல்லாம் எனக்கு எங்கள் அம்மாதான், அம்மாவேதான்! எல்லாமே அம்மாதான், அதாவது அம்மா…’ என்று ஒரு தேர்ந்த அதிமுககாரரைப் போல புலம்பிக் கொண்டிருந்தார் பாரு.

‘ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க பாரு, எல்லோரிடமும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை’

நாம் ஏன் கமருவை கழுவி ஊற்றுகிறோம் என்பதற்கான இன்னுமொரு உதாரணம் இது. எந்த இடத்தில் எப்படி சமாதானப்படுத்துகிறார் பாருங்கள்.

‘அடேய், எங்கள் அம்மாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றார் பாரு.

‘ஓகே, எந்த பிரச்சனை வந்தாலும் வெளியில் போய் பார்த்துக்கொள்ளலாம் பாரு, தைரியமா இரு’

’வெளியே போய் எனக்கு என்ன பிரச்சனை என்றாலும் நீ என் கூட இருப்பாயா?’

’கண்டிப்பாக இருப்பேன் பாரு’

’டீலா?’

’டீல்!’

கமரு இருப்பார், அதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை! ஆனால், கமருவோடு பாருதான் இருக்கப் போவதில்லை! அதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த இடத்தில் பிக்பாஸ் ரெகுலர் ஷோவில் காட்டாத, 24x7 காட்டப்பட்ட ஒரு சில விஷயங்களை இங்கே பகிர்வது வாசகர்களுக்கு சிலவற்றைப் புரியவைக்கும் என்று நினைக்கிறேன்.. அது பின்வருமாறு...
VJ Parvathi

அதாவது நேற்றைய எபிசோடின்போது இரவு நேரத்தில் நாய் குரைத்துள்ளது. எல்லாரும் தூங்கும்போது ஏன் நாய் குரைக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் கமரு, உடை மாற்றும் அறைக்குள்ளிருந்து வெளியில் வருவது போல ஒரு காட்சியும் பின்னர் காண்பிக்கப்பட்டது. அப்போது பின்னணியில் அந்த அறைக்குள் வேறொருவர் இருப்பது போன்ற நிழல் பிம்பமும் தெரிந்தது.

அதன்பின் ஏதோ ஒரு விஷயத்துக்காக உடைமாற்றும் அறைக்குள் சுபி அழுதபடி விக்ரமிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போது பிக்பாஸ் வினோத்திடம் அதை முறையீடு செய்தார். 'இனி உடைமாற்றும் அறைக்குள் இருவர் இருந்தால் நான் திரையைத் தூக்கிவிடுவேன்' என்று கடுமையான குரலில் சொன்னார் பிக்பாஸ்.

இதுவரை பல சீசன்களில் அந்த அறைக்குள் இருவர் அழுவதும் சிரிப்பதுமான காட்சிகள் நடந்தேறி இருக்கின்றன. சொல்லப்போனால் யாராவது உணர்ச்சிமேலீட்டால் அழுகை வந்தாலே பாத்ரூம் அல்லது உடை மாற்றும் அறைக்குள்தான் செல்வார்கள். ஒருவேளை ஒருவர் அழ, இன்னொருவர் சமாதானப்படுத்திக்கொண்டே போகிறார் என்றால் அவர்கள் போவது உடைமாற்றும் அறைதான். பாத்ரூமுக்குள் இருவர் போகமாட்டார்கள்; தவிர யாராவது இயற்கை உபாதைக்குப் போவதற்கு அது தடையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

இந்நிலையில் பிக்பாஸ் அப்படிச் சொல்வதற்கான காரணம் என்ன என்பது மர்மமாக இருக்கிறது. அதுபோக, மேலே சொன்னபடி விஜே பாரு 'வெளில இது எப்டி போகிருக்கும்னு தெரியல', 'நான் வெளில போறேன் பிக்பாஸ்', 'நீ வெளில வந்தாலும் என்கூட இருப்பியா கமரு.. இதெல்லாம் கேம் இல்லடா' என்றெல்லாம் புலம்புவதும் பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் கிளப்பியபடிதான் இருக்கிறது!

இனி வேறு சிலவற்றைப் பார்ப்போம்...

கனியும், விக்ரமும் உட்கார்ந்து சான்ட்ராவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

’சான்ட்ரா ஒரு சிம்பதி கேம் ஆடுகிறார். அவர் என்னென்ன வார்த்தைகளை எல்லாமோ விட்டுவிட்டு, நீங்கள் 'ச்சீ' என்று சொன்ன ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி டிராமா செய்து கொண்டு இருக்கிறார். நாமே அவரைப் பற்றி இப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிற அளவுக்கு அவருடைய கேம் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கு பாசிட்டிவ் ஆக அமையலாம் அல்லது நெகட்டிவ் ஆகவும் போகலாம், எதையும் கணிக்க முடியவில்லை! இதில் நம் மீது ஏதாவது தவறு இருந்தாலும் வாங்கிக் கட்டிக் கொண்டுதான் ஆக வேண்டும்!’ என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தது ஓரளவுக்கு சரியான கருத்துக்கள்தான்.

Vikkals Vikram and Subhi

அடுத்து டான்ஸ் மரத்தானின் இரண்டாவது ரவுண்டின் தொடர்ச்சி! 

இரண்டாவதாக டான்ஸ் ஆடப்போன பாருவின் குழு, நாட்டியப் பேரொளி பாருவின் திறமையால் எளிதாக வெற்றி பெற்றார்கள்.

’என்ன, இந்த வாரம் ஒரு விசயத்திலும் நம் பெயர் அடிபட வில்லையே, வீக்கெண்டில் வெளியே தள்ளிவிடுவார்களோ’ எனும் பயத்தில் சுபி, விக்ரமிடம் அழ ஆரம்பிக்க, அவரும் அதை உணர்ந்துவிட்டாரோ என்னவோ ஆறுதல் சொல்லப்போன விக்ரமும் கூடச்சேர்ந்து அழுதார். சுபியைக் கூப்பிட்டு பிக்பாஸே ஆறுதல் சொல்கிற அளவுக்கு இது போய்விட்டது போலிருக்கிறது.

சாண்ட்ராவின் குழு, அடுத்து டான்ஸ் ஆடப்போனார்கள். ’கன்னித்தீவு பொண்ணா’ பாடலைக் கண்டுபிடிக்க இந்தக் குழுவுக்கு நாக்கு தள்ளிவிட்டது. ’அடிக்கிற கை அணைக்குமா?’ பாடலைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. திவ்யா நன்றாகவே ஆடி முயற்சி செய்தார்.

இது முடிந்ததும் நாம் எதிர்பார்த்தது போலவே, ‘பாப்பா பாடும் பாட்டு’ எனும் பாடலைப் பாடி எல்லோரும் டிஸ்டர்ப் பண்ணியதை பர்சனலாக எடுத்துக்கொள்வதைப் போல நடித்து, கனியின் மீது பழியைப் போட்டுக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அதாவது இந்தத் தமிழ்நாட்டிலேயே அவர் மட்டும்தான், அவரது குழந்தைகளை பாப்பா என்று அழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

கடைசியில் கமரு, பாரு, கனி, ஆதிரை இருந்த குழு, மொத்த டாஸ்க்கிலும் வெற்றி பெற்றது. டாஸ்க்கும் முடித்து வைக்கப்பட்டது!