Vj Paaru @Jiohotstar
BiggBoss 9

பிக்பாஸ்க்கு அளவெடுத்துச் செய்யப்பட்ட போட்டியாளர்! #Biggboss Day65

அதாவது ஆதிரை, எஃப்ஜேவுடன் நட்பைத் தாண்டிய நிலையில் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் அவருக்கு இது உரைக்கவில்லை, இப்போது நட்பு என்று சொன்னது ஒரு குற்றமாகிவிட்டதாம்!

ஆதி தாமிரா

பாரு, கமரு இருவரும் மைக்கைக் கழற்றிவிட்டு பேசுவது, காதருகே போய் ரகசியம் பேசுவது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாரு, சக போட்டியாளர்களை மதிப்பதில்லை, இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகளை மதிப்பதில்லை, பிக்பாஸை மதிப்பதில்லை, விஜய் சேதுபதியையும் மதிப்பதில்லை. இவரையெல்லாம் இன்னும் எதற்குத்தான் உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று புலம்பும் நம்மையும் யாருமே மதிப்பதில்லை! ம்கும்!

இன்றைய எபிசோடின் துவக்கத்தில், கமரு பாருவிடம், ’சான்ட்ரா, பிரஜின் ஆகியோர் கணவன் மனைவி. அவர்கள் அப்படி நடந்து கொள்ளலாம். நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலான உறவு என்னவென்றே தெரியவில்லை. வெளியே போன பிறகு நீ என்னிடம் பேசுவாயா என்பதே உறுதி இல்லை’ என்று சொல்லி எதிர்காலத்தை நினைத்து ஃபீலிங் செய்து கொண்டிருந்தார். ’என்னைப் பற்றியாடா சந்தேகப்பட்டு விட்டாய்? முதலில் மைக்கை கழட்டு, நான் ஒன்று சொல்கிறேன்’  என்று மைக்கை கழற்றிப் போட்டுவிட்டு கமருவின் காதில் ஏதோ குசுகுசுவென்று சொன்னார். அனேகமாக ஹிந்தியில் பேசியிருப்பார் போலிருக்கிறது. தொடர்ந்து இருவரிடமும் வெட்கச் சிரிப்பு! இவர்கள் இருவரின் காதல் கன்டென்ட் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து, வேறொரு லெவலுக்குப் போய்க்கொண்டிருப்பது போல தோன்றுகிறது. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

மறுநாளும், அதே போல மைக்கைப் பொத்திக் கொண்டு இருவரும் பேசியதால், சொல்லிச் சொல்லிப் பார்த்து கடுப்பான பிக்பாஸ் எல்லோரையும் நிறுத்தி வைத்துக்கொண்டு, ’இவர்கள் இப்படி விதிமுறை மீறல் செய்து கொண்டிருக்கிறார்கள், அதற்காக நீங்கள் அத்தனை பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்று சொல்லி, வீட்டிலிருந்த டீ, காபி, பால், முட்டை என அனைத்தையும் ரிட்டர்ன் கொடுத்து விடச்சொல்லி தண்டனை கொடுத்தார். சாப்பிடுவதற்காக அவித்துத் தயாராகத் தட்டில் வைத்திருந்த முட்டை உட்பட எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். அதை முன்னிட்டு, ஏதோ ஒரு தடவை தெரியாமல் இப்படி நடந்து விட்டது என்பது போல, ’மைக்கை பொத்திக் கொண்டு பேசிய எங்களுக்கு வேண்டுமானால் தண்டனை கொடுங்கள் சார், எல்லோருக்கும் வேண்டாம்’ என்று ஒரு குட்டி ட்ராமா போட்டுக் கொண்டிருந்தார் பாரு.

Housemates under the command of Biggboss

அடுத்து, இந்த வார வீக்லி டாஸ்க்கான ’வழக்காடு மன்றம்’ தொடங்கப்பட்டது. முதல் வழக்காக வினோத், ஆதிரையின் மீது ’பூசணி வெளியே போனதுதற்கு நான் காரணம் என்று சொல்லி எனது புகழைக் கெடுக்கிறார்’ என்று வழக்குத் தொடுத்தார். நீதிபதிகளாக அமித்தும், திவ்யாவும் பொறுப்பேற்றனர். வினோத்துக்கு வக்கீலாக விக்ரமும், ஆதிரையின் வக்கீலாக ஆரோராவும் வாதாடினார்கள். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. வினோத்தின் பக்கம் கேஸ் பலமாக இருந்ததும், விக்ரம் அதற்கு ஏற்ப வாதாடியதும் வினோத் ஜெயிப்பதற்கு உதவியது. ஆனாலும், அரோரா இந்த டாஸ்க்கை சரியாகப் புரிந்துகொண்டு முடிந்தவரை ஆதிரையின் பக்கம் நியாயம் சேர்க்கும்படி விளையாடினார். அவ்வப்போது அவரது தமிழ் உச்சரிப்பு கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கியது. 

இந்த டாஸ்க்கிலும் பாரு உள்ளிட்ட பார்வையாளர்களின் பக்கத்திலிருந்து பிரச்சனை வரத்தான் செய்தது. ஒரு நிஜமான கோர்ட்டைப் போலவே நீதிபதிகளும், வக்கீல்களும், நடந்து கொண்டிருக்கும் போது டவாலியாக நடித்த எஃப்ஜே, நீதிபதி சொல்லவேண்டியவற்றையெல்லாம் சொல்லி வினோத்தை மிரட்டிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களின் பக்கத்திலிருந்து வேறு கோர்ட்டாவது ஒண்ணாவது ரேஞ்சுக்கு கசகசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, பாரு எதையோ உழப்பிக் கொண்டிருந்த போது, திவ்யா ஒரு ஜட்ஜாக குறுக்கிட்டு அமைதியாக இருங்கள் என்று சொன்னதைப் பொறுக்கமுடியாமல் பொருமிக்கொண்டிருந்தார் பாரு. இன்னொரு பக்கம், வினோத் அவர் வாயை மூடவே முடியாமல் அவஸ்தைப் பட்டு, நம்மையும் அவஸ்தைப் படுத்திக் கொண்டிருந்தார். வக்கீல், ஜட்ஜ், சாட்சிகள் என யார் என்ன சொன்னாலும், வினோத்தால் பதில் சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. ஒரு டாஸ்க்கில் கூட அவரால் இதைச் செய்ய முடியவில்லை. அதே சமயம் கொடுத்த வேடத்துக்கெல்லாம் எதாவது ஒரு உழைப்பைப் போடும் அமித் பாராட்டுக்குரியவராகிறார். இதில்கூட நீதிபதி போலவே மேக்கப், மீசை, தலைமுடி ஸ்டைல் என்று இருந்ததோடு, நடக்கும்போதுகூட அந்த ஸ்டைலைப் பின்பற்றினார்.

டவாலியாக இருந்த எஃப்ஜே, ஆதிரையின் பக்கத்து ஆட்கள் பேசிய போது சும்மா இருந்துவிட்டு, தான் பேசியபோது ’வாயை மூடுங்கள்’ என்று கத்தியதாகச் சொன்னார் வினோத். டாஸ்க் முடிந்து வெளியே வந்த பிறகும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினையிலிருந்தும், ஆதிரை தான் மீட்டர் போட்டுக்கொள்ள ஒரு கிளைக் கதையை எடுத்துக் கொண்டு வந்தார். அதாவது, வினோத், எஃப்ஜேவிடம், ’நான் பேசியபோது வாயை மூடுங்கள் என்று சொன்னாய், ஆனால் ஆதிரைக்கும், உனக்கும் நட்பு இருந்ததால் அவர்கள் பேசும்போது ஒன்றும் சொல்லவில்லை’ என்று சொல்லி சண்டைக்குப் போனார். அதாவது, ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் சண்டை போட்டுக்கொள்ளுங்கள், அது எனக்குத் தேவையில்லை. ஆனால், ஆதிரைக்கும், எஃப்ஜேவுக்கும் நட்பு இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? அது எனக்கு எப்பேர்ப்பட்ட அசிங்கம்? எங்கள் ரெண்டு பேருக்கும் இடையிலே அப்படி எந்த நட்பும் இல்லை’ இன்று வினோத்திடம் சண்டைக்கு போனார். அதாவது ஆதிரை, எஃப்ஜேவுடன் நட்பைத் தாண்டிய நிலையில் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் அவருக்கு இது உரைக்கவில்லை, இப்போது நட்பு என்று சொன்னது ஒரு குற்றமாகிவிட்டதாம்! ஆனால், ’என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா’ வடிவேலு போல, ’நீ பேசும்போது அவன் ஒன்றும் சொல்லவில்லை. நான் பேசும்போதுதான் வாயை மூடு என்று சொன்னான்’ என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவரை வெறுப்பேற்றி விட்டார் வினோத். 

Court Task

இது செல்ஃப் எடுக்கவில்லை என்றதும், கேஸில் ஜெயித்ததும் பாக்கெட்டுக்குள் கை வைத்துக்கொண்டு நக்கலாக, நாக்கை மடித்துக் காண்பித்தார் என்று ஒன்றைக் தூக்கிக்கொண்டு வந்தார் ஆதிரை. அவரும் அப்படிச் செய்திருக்க வேண்டாம், அப்படியே அவர் செய்தாலும் ஒரு டாஸ்க்தானே, அதிலென்ன பிரச்சினை என்று ஆதிரையும் விட்டிருக்கலாம். இந்தப் பஞ்சாயத்திலும் யாரையும் பேச விடாமல் வினோத் கத்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், கமருவே, வினோத்தைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லுகிற அளவுக்கு ஆகிப்போய்விட்டது. மற்றவர்களுக்கும் ஆதிரை, வினோத்தின் இந்தப் பஞ்சாயத்துகளில் ஆர்வமில்லாமல் விலகிப் போய்விட்டதால் அது கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.

அடுத்து வெளியே உட்கார்ந்து சாப்பிடும் போது, ’வினோத், திவாகர் 2.0 மாதிரி நடத்துகொள்கிறார்’ என்று வியானா, விக்ரமிடம் புலம்பிக்கொண்டிருந்தார். கூடவே பாருவைப் பற்றி ஆச்சரியத்தோடு ஒன்றைச் சொன்னார், ‘இவ்வளவு நான் கவனிக்கல, இப்பதான் பாருவைக் கவனிச்சேன் விக்ரம். என்னங்க இது, அட் அ டைம்ல ரெண்டு பக்கமுமே பேசிகிட்டு இருக்கா அவ. எனக்கு பக்குனு இருந்துச்சு. எப்படிங்க அவளால இப்படி பண்ணமுடியுது?’ அதற்குத்தான் விக்ரம் இப்படிப் பதில் சொன்னார்,

‘இப்பத்தான் கவனிக்கிறியா நீயி? பாருவெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே அளவெடுத்து செஞ்ச பீஸாக்கும்!’