Captaincy task arrangments @jiohotstar
BiggBoss 9

கைதட்டல்களை அள்ளிய அப்சராவின் அம்மா! #Biggboss Day 11

டாக்டர் திவாகர் பிபிடி அரக்கன் வாட்டர்மெலன், சைகாலஜிஸ்ட், அடுத்தவர்களை ஜட்ஜ் செய்வதில் வல்லவன், பார்த்தாலே கண்டுபிடிச்சிடுவேன், அப்படிப்பட்ட திவாகர் யாரைச் சொல்றேன்னா...

ஆதி தாமிரா

அடுத்த வார தல போட்டிக்கான ஆட்களாக கடந்த வார பெஸ்ட் பெர்மாமர்ஸ் இரண்டு பேரை செலக்ட் செய்யச் சொன்னார் பிக்பாஸ்! சபரியும், கனியும் ஏகோபித்த ஆதரவைப் பெற்றனர். அப்போது கூட, ‘நான் ஒரு பிபிடி டாக்டர் தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் வாட்டர்மெலன் ஸ்டார், டாக்டர் திவாகர் பிபிடி அரக்கன் வாட்டர்மெலன், சைகாலஜிஸ்ட், அடுத்தவர்களை ஜட்ஜ் செய்வதில் வல்லவன், பார்த்தாலே கண்டுபிடிச்சிடுவேன், அப்படிப்பட்ட திவாகர் யாரைச் சொல்றேன்னா...’ என்று பெர்ஃபார்மர் பேரைச் சொல்லாமல் அவர் அந்த இடத்திலும் பெர்ஃபாமன்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அடுத்து ஜெயிலுக்குப் போக, இரண்டு ஒர்ஸ்ட் பெர்ஃபாமர்ஸை சொல்லச் சொன்னதும், ஆதிரையையும், அரோராவையும் தேர்ந்தெடுத்தனர். ஜெனி பாப்பாவும், அப்ஸராவும் சரியான கருத்துகளைச் சொன்னதாகப் தோன்றியது. எஃப்ஜே. ஆதிரையைச் சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம், நமக்கு சந்தோசமாக இருந்தது. விக்கல்ஸ் விக்ரம் இன்னும் பூசி மெழுகி சேஃப் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறார், ரொம்ப நாளைக்கு இது தாங்காது விக்ரம்! இந்த டாஸ்கின் போதும் திவாகர் 'வாட்டர் மெலன் ஸ்டார்.. நடிப்பு அரக்கன்' என்று ஆரம்பிக்க... நமக்கு போதும்டா சாமி என்றிருந்தது.

Kamurudhin speaking about his journey

அடுத்து சொந்தக்கதை சோகக்கதை! முதலில் கமருதீன் அவரது கதையைச் சொன்னார். மோசமான அப்பா, மற்றும் அவரது இன்மையால் பாதிக்கப்பட்ட பையனின் டிபிகல் கதை! சுமாரான சோகக்கதையைக் கூட சிலரால் கேட்பவர் கலங்கும்படி சொல்லிவிட முடியும். ஆனால், நெகிழ்ச்சியான கதையைக் கூட கமருவுக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

அடுத்து வந்தது அப்சரா! அப்சராவின் கதையைக் கேட்க மிகுந்த பயத்தோடு காத்துக்கொண்டிருந்தோம்! அப்சராக்களின் கதை நம் சமூகத்தின் அறிவின்மையை, முதிர்ச்சியின்மையைக் காட்டக்கூடிய அதிர்ச்சியான கதைகளாகவே இருக்கும். ஆனால், எல்லோர் வயிற்றிலும் பாலை வார்க்கிற மாதிரியான கதையைச் சொன்னார். இப்படியொரு திருநங்கையின் கதையை, பெரும்பாலும் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். இது வரை எப்படியெல்லாம் ஒரு திருநங்கையின் வாழ்க்கை அமையக்கூடாதோ, அப்படியான கதைகளைத்தான் கேள்வியுற்றிருக்கிறோம். அப்சராவின் கதை ஒவ்வொரு திருநங்கையருக்கும் என்ன தேவையோ, எது நடக்க வேண்டுமோ அதற்கான உதாரணமாக இருக்கிறது. களியக்காவிளை எனும் தென் தமிழகத்து கிராமத்தில், இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்த எந்தத் தளைகளுக்கும் சிக்காத, தான் பெற்ற பிள்ளை எனும் ஒரே கண்ணோட்டத்தில் ஒரு தாயார் இருந்திருக்கிறார் எனும் போது மனிதத்தின் மீதான நம்பிக்கை இன்னும் வலுப்பெறுகிறது. அந்தத் தாயார், அப்சராவின் தாயார். அத்தனைக்கும் அப்சராவுடன் உடன் நின்றிருக்கிறார். நிறைவு!

Fj and Aadhirai performing in fashion show task

தலயைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்! கமருதீன், கனி, சபரி ஆகியோரின் பொம்மைகளின் மீது, சம்பந்தப்பட்டவரின் கண்ணில் படாமல் மற்றவர்கள் கத்தியால் குத்த வேண்டும். மூவரின் பொம்மைகளின் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்க ஆட்டம் சவசவவென்று இருந்தது. கமரு-வை பலரும் குறிவைக்க, அவர் அதை ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்ளாமல் காண்டானார். அந்தக் காண்டு ரம்யாவின் மீது வெளிப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பிறாண்டிக் கொண்டனர். முதலில் கமரு வெளியேற்றப்பட்டார்.

சபரியைக் குத்த முயன்ற பந்தா பாருவை சபரி பார்த்துவிட்டார். பார்க்கவே இல்லை என அழுகுணி ஆட்டம் ஆடத் தொடங்கினார் பந்தா பாரு. விட்டால், இவர் இந்த ஆட்டத்தையே குலைத்துவிடுவார் என்று பயந்து பிக்பாஸே ஆஜராகி, ‘அம்மா தாயே, உன் திருவிளையடாலை நிறுத்து, அவன் பாத்துட்டான்’ என்று பஞ்சாயத்து பண்ணி பாருவை அடக்கினாரோ, நாம் தப்பித்தோம்! அதையும், ‘இது என்னோட பிளான் தான், எப்படி ஒரு பிக்பாஸ் மொமண்ட் கிரியே ஆச்சுல்ல’ என்று சில்லறைத்தனமாக நடந்துகொண்டார்.

அடுத்து ஒரு ரேம்ப்வாக் பேஷன் ஷோ நடந்தது. ஸ்பான்சரின் தீபாவளி நெருக்கடி போலிருக்கிறது. அதில் எஃப்ஜே, ஆதிரை வென்றார்கள்.

இன்றைய சபாஷ்: அப்சரா, தன்னை திருநங்கையாக ஏற்றுக்கொண்ட தாயார் பற்றிச் சொன்னதும் பிக்பாஸ் வீட்டினர் அனைவரும் எழுந்து நின்று - அவர் தாயாரை, அந்தக் குடும்பத்தை - கைதட்டிப் பாராட்டியது.

இன்றைய 'உதாரண' மனுஷி: அரோராவை கெமி குறிப்பிட்ட ஒரு வார்த்தை குறித்து அரோரா புலம்ப, 'நானும் நெனைச்சேன். அது தப்பு' என்று ஏற்றிவிட்டதாகட்டும், கமருதீன், ரம்யா இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட அதையும் ஏற்றிவிட்டதாகட்டும் விஜே பார்வதி, ஒரு குழாமில் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். சுயநலத்தின் மொத்த உருவமாகவே வலம்வருகிறார். பிக்பாஸுக்கு இப்படியானவர்கள் தேவை என்பதால் வெளியே அனுப்ப மாட்டார்கள். அது பிக்பாஸின் ஸ்டிராட்டஜி!

இன்றைய வேண்டுகோள்: ஐயா, BB எடிட்டர்களே, இந்த திவாகர் தனக்குத்தானே ராஜாதி ராஜ.. என்று துதிபாடிக்கொள்வதை மட்டுமாவது கொஞ்சம் எடிட் செய்து வெளியிடுங்கள். சகிக்கவில்லை!